zaterdag 3 augustus 2013

பொதுபல சேனா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் காவியை கழற்றி எறிவேன்!- ஞானசார தேரர்

கண்டி மாவட்டத்தில் அசாத் சாலிக்கு வாய்ப்பு: ஐ.தே.கட்சிக்குள் எதிர்ப்பு
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 08:10.37 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகித் தனிக்கட்சி ஆரம்பித்துள்ள அசாத் சாலிக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக்கட்சியின் நடு நிலையான தலைவர் எனக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தேர்தல் பிரசாரங்களில் இருந்து விலகி வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். ஹலிம், அசாத் சாலி கண்டியில் போட்டியிவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அசாத் சாலி ஒரு அடிப்படைவாதி எனவும் கண்டியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் அசாத் சாலி போன்றவர்கள் கட்சியில் போட்டியிடுவதன் மூலம் கட்சிக்கு கிடைக்கும் பௌத்தர்களின் வாக்குகள் குறையக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுபல சேனா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் காவியை கழற்றி எறிவேன்!- ஞானசார தேரர்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:22.48 AM GMT ]
இலங்கையில் உள்ள முஸ்லிம் ஒருவரையோ, முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தையோ, முஸ்லிம் பள்ளிவாசலையோ பொதுபல சேனா  அமைப்பினர் தாக்கினர் என்று நிரூபித்தால் தான் அணிந்திருக்கும் காவியை உடையை கழற்றி எறியத் தயாராக இருப்பதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மஹியங்கனை நகரில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக எமது அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மஹியங்கனை விகாரைக்கு வந்து எனது காவி உடையை கழற்றி எறிவேன்.
40 வருடங்களாக மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.
அவர் உண்மையை மறைத்து, ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இப்படியானவர்களை விரட்டி விட்டு, முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசப்பற்றாளர்களை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten