வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:35.39 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன. அவற்றின் சின்னங்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் வழங்கப்பட்டன.
அச்சின்னங்களின் விபரம் வருமாறு,
அன்ரன் ரங்கதுசார தலைமையிலான சுயேட்சைக் குழு - 01 - பந்து சின்னத்திலும்,
இராஜலிங்கம் மிதுன்ராஜ் தலைமையிலான சுயேட்சைக் குழு - 02 - இரட்டைக்கொடிச் சின்னத்திலும்,
நல்லைநாதன் திருலோக நாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 03 - தபால்பெட்டி சின்னத்திலும்,
பொன்மதிமுக ராஜா விஜயகாந் தலைமையில் சுயேட்சைக்குழு - 04 - நாகபாம்பு சின்னத்திலும்,
ஜமீன் மொக மட் முஜையித் தலைமையிலான சுயேட்சைக்குழு - 05 - கூடாரம் சின்னத்திலும்,
மாணிக்கஜோதி அபிமன்னசிங்கம் தலைமையிலான சுயேட்சைக் குழு - 06 - சுத்தியல் சின்னத்திலும்,
இராசரத்தினம் ஸ்ரீதா மோதரராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு - 07 ஆமைப் பூட்டுச்சின்னத்திலும்,
கிருஷ்ணசாமி பாஸ்கரன் தலைமையிலான சுயேட்சைக்குழு - 08 - ஜம்புக்காய் சின்னத்திலும்,
தம்பிப்பிள்ளை இருதயராணி தலைமையிலான சுயேட்சைக் குழு - 09 - புறா சின்னத்திலும் போட்டியிடும் என யாழ்.மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சிப் அலுவலர் தெரிவித்தார்.
நுவரெலியாவை விட்டு வெளியேறும் தமிழர்கள் - அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:10.39 AM GMT ]
தென் பகுதியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே தமிழர்கள் பெரும்பான்மை இனமாக வாழ்ந்து வருகின்றனர்.
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் பெருபான்மையாக வாழும் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர். அதாவது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மத்திய மலையகத்தில் கடந்த மூன்று மாதங்களாக பெய்த கனமழை காரணமாக தேயிலை உற்பத்தி பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தோட்ட முகாமைத்துவமும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதுடன், தொழிலாளர்களுக்கு வாரத்தில் 06 நாட்கள் வழங்கப்பட்ட வேலை தற்பொழுது மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள நிலைமையில், தோட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்கள் குறைந்துள்ளதால், மூன்று மாத விடுமுறை பெற்று கொழும்பு அல்லது வேறு பிரதேசங்களுக்கு சென்று தொழில் புரியுமாறு தோட்ட அத்தியட்சகர்கள் தொழிலாளிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் வேறு தொழில்களை தேடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் வேறு இடங்களுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க தமது பிரதேசங்களுக்கு திரும்புவார்களா இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மலையக தொழிலாளர்களை இலக்கு வைத்து தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெரும் பின்னடைவுகளை சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten