maandag 19 augustus 2013

வெலிவேரிய கொலைகள் தொடர்பில் சாட்சியமளிக்க வருமாறு பொதுமக்களுக்கு இராணுவ நீதிமன்றம் அறிவித்தல்! !

வெலிவேரியா துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் படுகொலையானமை  தொடர்பில் வாக்குமூலங்களுக்காக வருமாறு இராணுவ நீதிமன்றம் ஊடகவியலாளர்களுக்கும் பொதுமக்களும் அறிவித்தல் வழங்கியுள்ளது.
எனினும் எந்த ஒரு ஊடகவியலாளரும் பொதுமக்களும் இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் ஆஜராகவில்லை.
ஆகஸ்ட் முதலாம் திகதியன்று வெலிவேரியாவில் குடிநீர் போராட்டத்தின் போது இராணுவம் சுட்டதில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளில் சாட்சியமளிக்குமாறு இராணுவ நீதிமன்றம் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தல்களை இராணுவத்தினர் நேரடியாக சென்று சாட்சியாளர்களிடம் கையளித்துள்ளனர்.
எனினும் இது பற்றி தமக்கு தெரியாது என்று இராணுவ பேச்சாளர் ருவன் வணகசூரிய தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryIScMVju0.html

Geen opmerkingen:

Een reactie posten