[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 03:15.45 AM GMT ]
தமிழ் மக்களது உண்மையான உணர்வான பிரச்சினைகளை முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதற்கும் நசுக்குவதற்குமான வேலையைச் செய்யும் புலனாய்வுப்பிரிவின் நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்து கொண்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜனநாயக வழியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களை தாக்கும் அரச இயந்திரக் காடையர்களின் செயற்பாடும் கண்டிக்கத்தக்கதும் கோழைகளின் செயலாக காணமுடிகின்றது.
தேர்தலில் உண்மையான வெற்றி பெற முடியாத கோழைகள் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கான சதிகார வேலையாகவே இச்செயற்பாட்டை பார்க்க முடிகின்றது.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணை என்ற தோரணையில் மிரட்டுவதும் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீதான விசாரணையும் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை நெடுந்தீவில் தாக்கியதும் அவர்கள் மீதான கொலை அச்சுறுத்தல்களும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையையும் மக்களின் வாக்களிப்பையும் தடுப்பதற்கான சதிகார வேலையாகவே பார்க்க முடிகிறது.
இச்செயலை தலைவர் மனோகணேசன் தலைமையிலான எமது கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் சதி வேலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாஸ்க்கரா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
தமிழீழ ஆதரவு மாநாட்டில் 12 விரிவுரையாளர்கள் பங்கேற்பு! உயர்கல்வி அமைச்சு செயலாளர் தகவல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 02:40.30 AM GMT ]
குறித்த மாநாட்டில் நான்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக ஏற்கனவே புலனாய்வுத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இப்புதிய தகவல்களை உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், ஊவா, கிழக்கு மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களே லண்டனில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். இது பாரிய குற்றச் செயலாகும்.
இவ்வாறு லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்ட 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் 11 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாடு திரும்பியதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முப்படைகளின் தளபதியான ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கூறியிருக்கும் புதிய தகவலையடுத்து புலனாய்வுத்துறையினர் அது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு லண்டன் சென்றுள்ள குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளவே சென்றதாகவும் சில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் குறித்த விரிவுரையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லண்டன் சென்றுள்ள குறித்த விரிவுரையாளர்கள் உண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச்ஹ சென்றார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே அவர்கள் நாடு திரும்பியதும் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னரே அது பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten