[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 12:17.48 PM GMT ]
வேளாண்மை அறுவடை இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் நற்பட்டிமுனையினைச் சேர்ந்த நவாஸ் என்பவரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்த வெல்லாவெளி பொலசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய போக்குவரத்து விதிமுறையில் மாற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறையிலிருந்த மோட்டார சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற புதிய சட்டமூலத்தினை இன்று முதல் தளர்த்தியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில பின் ஆசனத்திலிருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் திடீரென கொண்டு வரப்பட்டது.
இதனால தமிழ் கலாசார உடையுடன் பயணிக்கும் பெண்களும் முஸ்லிம் பெண்களும் பலத்த அசௌகரியங்களை எதிர் கொண்டிருந்தனர்.
இன்றுமுதல் இந்த புதிய சடடம் தளர்த்தப்பட்டுள்தாகவும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கம் பெண்கள் வழக்கம்போல் ஒருபக்கம் கால்களை வைத்துக்கொண்டு பயணிக்கலாம் எனவும் இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் நாளை காத்தான்குடியில் இடமபெறவுள்தாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபரிடம் இந்தச் சட்டத்தினை தளர்த்துமாறும் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அனுராதபுரம் பள்ளிவாசல் மாநகர சபையினால் அகற்றப்பட்டது!
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 12:15.24 PM GMT ]
சர்ச்சைக்குரிய இந்த பள்ளிவாசல் தொடர்பில் கடந்த பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்துள்ளது.
எனினும், இந்த பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அனுராதபுரம் மாநகர சபை தீர்மானித்துள்ளது.
எனினும் புனித நோன்பு காலம் என்பதனால் குறித்த தீர்மானத்தை சில நாட்களுக்கு ஒத்திவைத்திருந்தது.
தற்போது நோன்பு பெருநாள் முடிவடைந்த நிலையிலேயே மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் இன்று அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவசால் மீது கடந்த வருடம் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் மற்றொரு நாளும் என இரண்டு தடவைகள் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten