[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 10:52.09 AM GMT ]
ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது பொலிஸார் தமது கடமையினைச் செய்யத் தவறி விட்டதாக, பொலிஸ் மா அதிபர் என். இலங்ககோனிற்கு அமைச்சர் ரிசாத் பதியூதின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசாங்கம் தனது வங்குரோத்து நிலைமையை உணர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரசாங்கத்திடம் இருந்து வேகமாக விலகி வருகின்றனர்.
அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளதை உணர்ந்துள்ளது.
பௌத்தர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் மோதல்களை உருவாக்கி வருகின்றனர்.
பௌத்த தர்மத்திற்கு முரணான செயற்படுவர்களை பயன்படுத்தி அரசாங்கம் முஸ்லிம் மக்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து கொண்டுள்ளது.
அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை என்பதால், பணத்தையும் சோற்று பார்சல்களையும் கொடுத்து பேருந்துகளில் மக்களை பலவந்தமாக ஏற்றி வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
தமது பக்கம் மக்கள் இருக்கின்றனர் என்பதை காட்ட வேண்டும். அதுவே அரசாங்கத்தின் ஒரே நோக்கம்.
தேசத்திற்கு மகுடம் என்ற கண்காட்சி என்ற வேலைத்திட்டமும் அரசாங்கத்தின் இப்படியான தோல்வியான முயற்சிகளில் ஒன்று.
தற்போது கொழும்பு தெற்கு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது, அதனை சென்று பாருங்கள் என கிராமிய மக்களுக்கு அரசாங்கம் கூறியுள்ளது.
இதற்காக பெரும் தொகை பணம் செலவிடப்பட்டு மக்களைப் பேருந்துகளில் அழைத்து வருகின்றனர் என ஹேமகுமார நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: பொலிஸ்மா அதிபருக்கு ரிசாத் பதியூதின் கடிதம்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 12:08.01 PM GMT ]
இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிசாத் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன், பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது சீ.சீ.ரி.வி கெமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய இறுவெட்டு ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது கடிதத்தில்,
பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு சாட்சியாக அப்பகுதியில் வாழும் பல மக்கள் உள்ளனர். முஸ்லிம் மக்களும் அவர்களது பள்ளிவாசல்களும் தாக்கப்படுவது இது முதல் தடவையல்ல. அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் பொலிஸார் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை.
கடமையை நிறைவேற்றாத பொலிஸாருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten