[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 11:54.29 PM GMT ]
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட தமது கணவருக்கு இறந்த பின்னர் வழங்கப்படவேண்டிய பதவியுயர்வு வழங்கப்படவில்லை. அத்துடன் அதற்கான ஓயவூதிய கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் டி ஜெயரட்ணத்தின் மனைவி சரளா தெரிவித்துள்ளார்.
தாம் இது குறித்து பொலிஸ் உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் அண்மையில் நடந்த அசம்பாவிதம் தொடர்பில் அரசியல் லாபத்தை கருதாது அதனை கடந்து பேச வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஜெயரட்ணம், 2005 ம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியன்று தெஹிவளையில் இருந்து விடுதலைப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த தகவல்களை இதுவரை காலமும் உறுதிசெய்ய முடியவில்லை.
எனினும் விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 85 பேர் கொல்லப்பட்டதாக இலங்கையின் தடுப்பில் உள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டதாக பொலிஸ் திணைக்களம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.
அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஜெயரட்ணமும் அடங்குவதாக குறித்த விடுதலைப்புலி உறுப்பினர் குறிப்பிட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே ஜெயர
வெலிவேரிய அசம்பாவிதத்தில் அரசியல் லாபம் வேண்டாம் - ரணில் - விசாரணை நடத்துமாறு கர்தினால் கோரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 11:45.14 PM GMT ]
அந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றும்போதே இந்த கருத்தை வெளியிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்கியதாக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, மக்கள் பெற்றோல் குண்டு வீசியதாக கூறி அரசியல் லாபம் தேடும் முயற்சியை விடுத்து சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பதனை விசாரணை மூலம் அறியுமாறு வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தனக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதாகவும், அதன் போது பிண்ணனியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்க கூடியதாக இருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் கோரிக்கை
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க சபை கடும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.
அமைதியான முறையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும்.
நிராயுதபாணிகளான கிராம மக்கள் மீதான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது.
தேவாலயத்தில் அடைக்கலம் பெற்றுக் கொண்ட மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்மையாக்கக் கண்டிக்கப்பட வேண்டியது.
ஆயுதங்களுடன் தேவாலய பூமிக்குள் பிரவேசித்தமை மதத்தை இழிவுபடுத்தும் செயலாகவே கருத வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கர்தினால் கோரியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த, கம்பஹா சென் பீட்டர்ஸ் பாடசாலை மாணவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten