தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது! காங்கிரஸுடன் தமது உறவு முறியலாம்!- திமுக!


யாழ்.தீவகக் கடற்பகுதியில் மற்றுமொரு ஆணின் சடலம் மீட்பு: இதுவரையில் ஏழு சடலங்கள் கரையொதுங்கின
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 03:12.00 AM GMT ]
யாழ்.தீவகக் கடற்கரையில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கிவரும் நிலையில் மற்றுமொரு ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமான அழுகிய நிலையில் புங்குடுதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இங்கு மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவருக்கு 35 முதல் 45 வரையான வயது இருக்கலாமென பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதுவரையில் தீவகக் கடற்பகுதியில் 7 சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் எங்கிருந்து வந்தென்பது இதுவரையில் மர்மாகவே இருந்து வருகின்றது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது! காங்கிரஸுடன் தமது உறவு முறியலாம்!- திமுக
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 08:24.02 AM GMT ]
கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது.  அவ்வாறு பங்கேற்றால் மத்திய அரசாங்கத்துடன் தமது உறவு இருக்காது என்று திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது.
கழகத்தின் பேச்சாளர் இளங்கோவன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்று திமுக ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எனினும் அதற்கு மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றும் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெற்று அடுத்த இரண்டு வருடங்களுக்கு அதன் தலைமை மஹிந்த ராஜபக்சவிடம் செல்லுமானால் பிராந்தியத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் இளங்கோவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையுடன் நட்பு நாடு என்ற நிலைப்பாட்டை கைவிடுமாறு அதிமுக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மத்திய அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.
இந்தநிலையிலேயே திமுகவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten