மலையகத்தில் தொடர்ந்தும் மழை: 8000 பேர் பாதிப்பு! 969 வீடுகள் சேதம்! இடம்பெயர்ந்தோர் 11 முகாம்களில் தஞ்சம்! 12 பேர் உயிரிழப்பு
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 12:06.12 AM GMT ]
மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 11 நிவாரண நிலையங்களில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் நோட்டன் பிரதேசத்திலேயே ஆகக்கூடியதாக 56.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.
கடந்த இரு தினங்களுடனும் ஒப்பிடுகையில் கிடைக்கப் பெற்ற மழை வீழ்ச்சியினளவு குறைவாக இருந்த போதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக மத்திய மாகாணத்தின் மேற்கு மலைச்சாரலில் அவ்வப்போது மழையுடன் கூடிய காலநிலை தொடருமென வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரியான பிரபோதினி கருணாபால கூறினார்.
இதேவேளை, நேற்றும் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்து வந்த மழை காரணமாக 2 ஆயிரத்து 366 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் மத்திய மாகாணத்திலுள்ள 231 குடும்பங்களைச் சேர்ந்த 698 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இந்த அனர்த்தம் காரணமாக 17 வீடுகள் முழுமையாகவும் 952 வீடுகள் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்ததையடுத்து மேல் கொத்மலை, விக்டோரியா, கெனியன், லக்சபான, காசல்ரீ, கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் அதேவேளை மேல், தெற்கு, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது நண்பகல் வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து காலியூடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பரப்பிலும் நாடு முழுவதும் வீசக்கூடிய காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் குளிருடன் கூடிய கால நிலை காரணமாக தலவாக்கலையில் 12 பேர் உயிரிழப்பு
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலைப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய குளிரான கால நிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நிலவி வருகிறது.இதனால் கடந்த ஜூலை மாதம் வரை தலவாக்கலை தோட்டத்தில் 9 பேரும் நானுஓயா தோட்டத்தில் 3 பேரும் குளிரினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த பிரசேதங்களில் பெருந்தோட்ட தேயிலை பயிர்ச்செய்கை பாதிப்புக்குள்ளாகி இருந்ததோடு விவசாயமும் சில இடங்களில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 12:28.36 AM GMT ]
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் அவரை பொலிஸார் 12.15 மணியளவில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற நடுவர் மும்மூர்த்தி முன் 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் விசாரணைக்காக ஆஜராயினர்.
நளினியிடம் குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டது.
அதைப் பெற்றுக்கொண்ட நளினியிடம், "சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?' என நடுவர் மும்மூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இது தவறான குற்றச்சாட்டு, 22 ஆண்டுகளாக வேலூர் மத்தியச் சிறையில் சிறை கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் உள்ளேன் என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை இம்மாதம் 19-ம் தேதி நடைபெறும் என நடுவர் தெரிவித்தார்.
அப்போது நளினி, "தன்னை இவ்வழக்கில் நேரடியாக ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நடுவர், வழக்கின் முக்கிய சாட்சிகளின் விசாரணையின் போது நளினியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும். பிற விசாரணைகளை விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten