தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதற்கான அழுத்தம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


பதில் தலைமை நீதிபதியாக சிரானி திலகவர்தன சத்தியப் பிரமாணம்!
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 10:56.06 AM GMT ]
சிரானி திலகவர்தன இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.

சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதற்கான அழுத்தம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 11:03.25 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் பங்கெடுத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங் கொண்டுவருவதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டி அந்தந்த தொகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இது முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட இருகின்றது.
சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் தான் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்கள் கவலை கொள்ள வைத்துள்ள நிலையில் இக்கையெழுத்துப் போராட்ட முனைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்கா விவகாரத்தினை தீவிரமாக கொண்டு செல்வதன் ஊடாக, பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதோடு, பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டினை பிரித்தானியா எடுப்பதற்கு வழிகோலும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த தொகுதி வாழ் மக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்திட்டத்தின் ஓர் சம்பவத்தினை விளக்கிய அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள், 2012ம் ஆண்டு நடுப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கமைக்கப்பட்டிருந்த கூட்டமொன்றில் அன்றைய அமைச்சரும் திறைசேரி தலைமைச் செயருமாக இருந்த  Stephen Timms அவர்களிடம் சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டினை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அத்தொகுதி மக்களின் கூட்டாதரவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிளினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 17ம் நாள்  Stephen Timms அவர்கள் இவ்விவகாரத்தினை பாராளுமன்ற கேள்விநேரத்தில் பிரஸ்தாபித்திருந்ததோடு பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதன்பலனாக சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் தற்போதைய சூழந்நிலையில் பிரித்தானியா பங்கெடுப்பது பொருத்தமல்ல என தனது அறிக்கையில் பாராளுமன்ற வெளிவிகாரக்குழு தெரிவித்திருந்தது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten