[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 11:18.25 AM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அளவை சுரங்கப் பணியகம் முதற்கட்ட விசாரணைகளை இன்றைய தினத்திலிருந்து தனது முதற்கட்டப் பரிசோதனை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், இங்குள்ள நைத்திரேட்டு பெறுமானம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்தப் பிரதேசத்தில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ள இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும் எனவும் அதன் பின்பே அறிக்கை தயாரிக்க முடியும் எனவும் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீரைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். அவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெலிவேரிய கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
வெலிவேரிய வன்முறைச் சம்பவத்தில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரில் இரசாயனப் பொருட்கள் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 11:44.17 AM GMT ]
இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று வழக்கு விசாரணையின் போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார்.
ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறிவிட்டார்.
அதன் பிறகு மனுவை நிராகரிக்க நீதிபதி முடிவெடுத்தாக சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனி பிபிசியிடம் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியை தாக்கியவர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதம் காரணமாக இலங்கையின் வட பகுதியிலிருந்து சுமார் இருபதாயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில்,தேர்தல் நடைபெற்றால் மீள்குடியேற்றப்படாத மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளது என்றும், சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளார் என்றும் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்தார்.
இந்த வழக்கை தாக்கல் செய்த சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனியே இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொழும்பு சென்றிந்த வேளையில், இராணுவ மரியாதையை பார்வையிட்ட போது துப்பாக்கியால் தாக்க முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Geen opmerkingen:
Een reactie posten