[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 09:55.21 AM GMT ]
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டின் உரிமையாளர் மீது மயக்க மருந்தைத் தெளித்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை காத்தான்குடி சேர் றாஸீக் பரீட் மாவத்தையிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள், வீட்டின் உரிமையாளர்கள் மீது மயக்க மருந்தைத் தெளித்துவிட்டு, அங்கிருந்த டிஜிட்டல் கமரா மற்றும் ஏ.ரி.எம்.அட்டையை என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாரிசுகளைக் களமிறக்கியுள்ள அரசியல்வாதிகளால் ஆளும்கட்சிக்குள் சர்ச்சை
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 10:22.25 AM GMT ]
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதவியிலுள்ள அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
சப்ரகமுவ ,வடமத்திய, கிழக்கு மாகாணசபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் போது இவ்வாறு அறிவித்திருந்தார்.
ஆனால், இம்முறை அதிகளவில் ஆளும்கட்சி குடும்ப வாரிசுகளை களமிறக்கியுள்ளதாக, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜத ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த்,
அரசியல்வாதிகளின் உறவினர்களை போட்டியில் நிறுத்துவதில் தவறு இல்லை. இந்தியாவில் நேரு-காந்தி குடும்பம் பல தலைமுறைகளாக அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியின் தலைவியாக ராஜீவ்காந்தியின் மனைவி சோனியா இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள், வாரிசுகள்,
பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, மத்திய மாகாணசபைக்கு கண்டி மாவட்டத்தில் தனது மகன் அனுருத்த ஜெயரட்ணவைக் களமிறக்கியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, கண்டி மாவட்டத்தில் தனது இளைய சகோதரரையும், மைத்துனரையும் களமிறக்கியுள்ளார்.
தனியார் போக்குவரத்து அமைச்சர் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க, தனது சகோதரரை, நுவரெலிய மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவும், தனது சகோதரரை, நுவரெலிய மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தியுள்ளார்.
காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன், மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வடமத்திய மாகாணசபைக்கு, குருநாகல் மாவட்டத்தில் தனது மகனைப் போட்டியில் இறங்கியுள்ளார்.
தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு அமைச்சர் ஜெயரத்ன ஹேரத்தின் மகன் குருநாகல மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
குருநாகல மாவட்டத்தில், பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தனது சகோதரரைக் களமிறக்கியுள்ளார்.
அதேமாவட்டத்தில், சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சாலிந்த திசநாயக்கவின் மனைவியும் போட்டியிடுகிறார்.
Geen opmerkingen:
Een reactie posten