[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 04:58.27 AM GMT ]
இந்த கோரிக்கை அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகிய இருவரினாலும் கூட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் அக்கரைப்பற்று கண்ணகிப்புரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிலுள்ள தமிழ் முஸ்லிம் கிராமங்களான ஐய்யங்கேணி முஸ்லிம் கிராமம், ஐய்யங்கேணி தமிழ் கிராமம், மிச்சி நகர், தாமரைக்கேணி, ஹிஸ்புல்லா நகர், மீராகேணி, சதாம் ஹுஸைன் கிராமம், முஹாஜிரீன் கிராமம், தளவாய், புண்ணக்குடா, சவுக்கடி, குடியிருப்பு உட்பட இன்னும் சில கிராமங்களை உள்ளடக்கி இந்த புதிய பிரதேச சபையை அமைக்குமாறு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் சுமார் 6,500 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் உள்ளனர். இக்குடும்பங்களை உள்ளடக்கியதான இந்த புதிய பிரதேச சபையை உருவாக்குமாறு அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது- பேலியகொட நகர சபை உறுப்பினர் கைது- கஞ்சா விற்பனை செய்தவர் கைது
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 05:14.55 AM GMT ]
அக்கரைப்பற்று ஒலுவில் கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒன்றை குழல் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 05 தோட்டக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியுடன் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒன்றை குழல் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 05 தோட்டக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியுடன் இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொட நகர சபை உறுப்பினர் கைது
பேலியகொடை நகர சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் குறித்த நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு - கட்டுநாயக்க விரைவு பாதையில் கடந்த திங்கட் கிழமை இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
நகர சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான நகர சபை உறுப்பினர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார்.
பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஏறாவூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் பிரதேசச்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்வசம் கஞ்சாவை வைத்திருந்ததோடு அதனை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர், தைக்கா வீதி சந்தியில் வைத்து நேற்று இரவு இந்நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten