[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 03:37.37 AM GMT ]
அண்மைக் காலமாக அவரின் அரசசார்பு போக்கு மற்றும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க மறுத்தமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்தே இவர் நீக்கப்படவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் குறித்து பிரித்தானியாவும் தமது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத்தை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காவிட்டால் தாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறப் போவதாக உயர்மட்ட உறுப்பினர்கள் அமைச்சர் ஹக்கீமை வலியுறுத்தியதுடன் காலக்கெடு விதித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெலிவேரிய தாக்குதல்! அமெரிக்காவைத் தொடர்ந்து பிரித்தானியாவும் கவலை!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 02:46.50 AM GMT ]
சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவானதும், வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.
முன்னதாக, வெலிவேரிய தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten