[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 02:16.35 PM GMT ]
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார் 25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும் கொண்ட இம் மீனானது கடலின் கரையில் ஒதுங்கியுள்ளது.
இதனை உடனடியாக பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் இன்றி அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் அணித் தலைவர் முதுகெலும்பு இல்லாதவர்!- அமைச்சர் விமல் வீரவன்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 01:55.51 PM GMT ]
ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழாவில் இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும் போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இலங்கை கிரிக்கெட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
Geen opmerkingen:
Een reactie posten