zondag 9 juni 2013

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்!- வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 24ஆக உயர்வு! 22 மீனவரை காணவில்லை! 30 படகுகள் கரை திரும்பவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 03:30.57 PM GMT ]
சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும், காலி மாவட்டத்தில் 12 பேரும் மரணமடைந்துள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், 22 மீனவர்கள் காணமல் போயுள்ளதாகவும் 30 படகுகள் கரைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சேதமடைந்த 14 படகுகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் அறிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
இலங்கை கடலில் கடும் காற்று காரணமாக விபத்துக்குள்ளான படகுகளில் சென்றிருந்த 22 மீனவர்களரின் சடலங்கள்   மீட்கப்பட்டுள்ளதாக மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.
மேலும் 28 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விபத்துக்குள்ளான மீனவப்படகுகளில் இருந்து காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களில் காலநிலை சீரடைந்தமை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த நீர்த்தேக்கங்களின் மட்டங்கள் குறைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாக மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் சரத்லால் குமார தெரிவித்தார்.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டில் நிலவும் கடும் காற்றுடனான மழை காலநிலை படிப்படியாக குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தென்மேற்கு கடற்பிராந்தியம் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும் என்று திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்ததினால் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு துறைசார் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 04:53.11 PM GMT ]
காலநிலை அவதான நிலையம் சரியான எச்சரிக்கைகளை விடுக்காததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பொறுப்பேற்றுள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தில் கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புகளை எதிர்நோக்கிய மக்களுக்கு இன்று நிவாரணம்
வழங்கப்பட்டது.
இதுதொடர்பில் இன்று நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட 305 குடும்பங்களுக்கு 1500 ஷரூபா வீதம் வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, காலநிலை அவதான நிலையம் கடந்த நாட்களில் வழங்கிய தகவல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இது குறித்து எதிர்வரும் இரண்டு தினங்களில் முழுமையான அறிக்கை ஒன்றை தாம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிகாரிகள் காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை தவறவிட்டிருந்தால் எந்தவித தராதரமும் பாராமல் தண்டனைகள் வழங்கப்படும்.
காலநிலை அவதான நிலையமானது பலம்வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதனை முழுமையாக நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் துல்லியமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தால் மீனவர்கள் கடலுக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
அதேநேரம் அமைச்சர் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு தவறிழைக்கப்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்!- வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 03:32.16 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வல்லை வெளியொன்றிலுள்ள கோயில் ஒன்றிலிருந்தே தனிமையில் அழுது கொண்டிருந்த நிலையில் இம்மாணவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து இவர் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten