
கடந்த வருடம் ஜூலை மாதம் “நிரோசன் தில்லைநாதன்” என்ற 22 வயது இளைஞர் ஸ்காபுரோவில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 10 மணித்தியாலங்களின்பின் சிசான் மாலிக் என்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். “மக்கொவான்” வீதியில் 401 பெருவீதிக்கு வடக்கே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையாளியின் சகோதரியை ஆபாசமான நிலையில் போட்டோ எடுத்து அதனை அவருக்குக் காட்டி பிளாக் மெயில் பண்ணியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நிரோசனைக் கத்தியால் குத்திக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜூன் மாதம் ரொறொன்ரோ ஈற்றன் சென்ரரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நிக்சன் நிமலேந்திரன் என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இனத்க் கொலையில் சம்பந்தப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிக்சன் ஒரு கிரிமினல் குற்றவாளி.கொக்கயின் என்ற போதைவஸ்து வியாபாரம் காரணமாக குற்றவாளியாக 2011 மார்ச் மாதம் சிறைத் தண்டனை பெற்றவர். அவருக்கு சிறையில் இருந்தபோது ஒரு கொலைக் குற்றச்சாட்டும் உண்டு. சிறையில் கூடவே இருந்த கைதி ஒருவரைக் கொலை செய்ததில் உடந்தையாக இருந்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டு பின் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

இவ்வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி நிக்சன் நிமலேந்திரனின் சகோதரர் நிசான் நிமலேந்திரன் சுட்டுக் கொல்லப்ட்டார். ரிறொன்ரோ கப்பேஜ் ரவுணிலுள்ள 55 பிளீக்கர் வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வைத்து நிசான் நிமலேந்திரன் கொல்லப்பட்டார். கொலையாளிகள் வீடியோவில் பதிவாகியுள்ளனர். இருந்தாலும் பொலிசாரால் அடையாளம் காணமுடியவில்லை.

தற்போது ஸ்காபுரோப் பகுதியில் கொல்லப்பட்ட சுரேந்திரா வைத்திலிங்கம் என்ற குடும்பஸ்தரின் கொலையில் தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொலை பொலிசாருக்கும் சவாலாக உள்ளது. எதிரேயுள்ள கண்கானிப்பு வீடியோவில் இந்தக் கொலைகாரர்கள் பதிவாகியுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten