vrijdag 7 juni 2013

ஊடகவியலாளர் லோகினி ரதிமோகன் நிலை என்ன?: ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு கவலை


பல இலட்சம் பெறுமதியான தங்கம் கடத்திய அமெரிக்கப் பிரஜை கைது
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 08:25.57 AM GMT ]
சட்டவிரோதமாக தங்கத்தை எடுத்துவந்த அமெரிக்கப் பிரஜையொருவர் விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
இவரிடமிருந்து 126 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன, 627 கிராம் எடையுடைய இந்த தங்கக் கட்டிகளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரான அமெரிக்கப் பிரஜையின் பயணப் பொதியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லோகினி ரதிமோகன் நிலை என்ன?: ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு கவலை
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 08:03.48 AM GMT ]
புகலிடம் கோரிச் சென்ற இலங்கை பெண் ஊடகவியலாளர் ஒருவரின் நிலைமை தொடர்ந்தும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெண் தொலைக்காட்சி ஊடகவியலாளரான லோகினி ரதிமோகன் என்பவருக்கே இவ்வாறு தமது எதிர்காலம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் படகில் சென்ற கும்பல் ஒன்றில் ஊடகவியலாளர் லோகினியும் அடங்கியிருந்தார். குறித்த படகு விபத்துக்குள்ளானதனைத் தொடர்ந்து படகில் பயணித்தவர்கள் டுபாயில் அடைக்கலம் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறு தற்காலிக அடிப்படையில் புகலிடம் பெற்றுக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினருக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட சில நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், லோகினி உள்ளிட்ட 15 தமிழ் புகலிடக கோரிக்கையாளார்கள் டுபாயின் ஜபல் அலி துறைமுகத்தின் அலுமினிய கைத்தொழிற்சாலையொன்றின் ஒர் அறையில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் புகலிட அந்தஸ்து குறித்து இதுவரையில் தெளிவான அறிவிப்புக்கள் விடுக்கப்படவில்லை.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அகதிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிலையமொன்றில் லோகினி கடமையாற்றியதாகவும் அவரை நாடு கடத்துவது ஆபத்தாகலாம் எனவும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten