vrijdag 7 juni 2013

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், சோனியா காந்திக்கும் இடையில் சந்திப்பு


விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறக்கம்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 06:24.56 AM GMT ]
கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த பகுதியில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் ஹென்ரி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“பெல் 412 ரக ஹெலிகொப்டர்” என்ற ஹெலிக்கொப்டரே கட்டுபொத்த மைதானத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், சோனியா காந்திக்கும் இடையில் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 07:56.44 AM GMT ]
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் புது டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
13 திருத்தச் சட்டத்தில் மலையக இந்திய வம்சாவளி  தமிழ் மக்களின் மொழி உள்ளிட்ட பல நிர்வாகக் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களுக்கு மத்தியில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும் இதனால் தனித்து ஓர் நிர்வாக அலகை கோருவது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
13ம் திருத்தச் சட்டக் கட்டமைப்பிற்குள் மொழி மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்கின்றதா என சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்கும் போது மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடமைப்பு திட்டங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மலையக சமூகத்தின் நலனை மேம்படுத்தக் கூடிய திட்டங்கள் பலவற்றிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உதவியளிக்கும் என இலங்கை தொழிலலாளர் காங்கிரஸிடம் சோனியா காந்தி உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மலையக சமூகம் ஒர் தனி இனச் சமூகமாக இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten