[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 02:54.40 PM GMT ]
அரசாங்கம் கொழும்பில் கசினோ மையங்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தால் தாமே முதலில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழ் தோழமை இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தமிழ் தோழமை நாளின் முதலாவது கலந்துரையாடல் ஜூன் மாதம் 8ம் திகதி சனிக்கிழமை லண்டனில் உள்ள School of Oriental and African Studies யில் பிரித்தானியாவின் பாரிய தொழில் சங்கங்களின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்றது.
கொழும்பின் முக்கிய பகுதியில் வரி விலக்குடன் கூடிய கசினோ மையமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமோ, நிறுவனம் ஒன்றோ அல்லது வேறும் நபர் ஒருவரே நாட்டில் கசினோ நிலையங்களை அமைக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு அவ்வாறான விளையாட்டுக்கள் அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கசினோ மையங்கள் அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்த பௌத்தர்களே வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலதா மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இலங்கை மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது தவறு!- பாரிய தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:57.49 PM GMT ]
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் முன்னோக்கிய நகர்வாகும்.
http://www.tamilwin.net/show-RUmryGSUNciu0.html
புலம்பெயர் பிரித்தானியத் தமிழ் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வாளர்கள், UNISON, PCS , தேசிய ஆசிரியர் சங்கம் - NUT, போக்குவரத்துக்கு தொழிலார் சங்கம்- RMT ஆகியவற்றைச் சேர்ந்த தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் எம்மைப் போன்ற நீதி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல்லின அரசியல் போராளிகள் பங்குபற்றிய இன் நிகழ்வு தொழில் சங்கங்களுக்கு, எமது அரசியல் போராட்டத்தைப் பற்றிய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி ஏறத்தாள 65 இலட்சம் அங்கத்துவர்களை கொண்ட இத் தொழில் சங்கங்களூடாக எமது அறப் போராட்டத்தை பிரித்தானிய அரசியல் நீரோட்டத்தில் இணைப்பதின் மூலமாக எமதினத்தின் விடுதலை நோக்கிய பயணம் இன்னுமொரு பரிணாமத்தை எட்டுவதற்கும் வழி சமைக்கும்.
தமிழ் இனத்தின் மீது அவிழ்த்து விடப்பட்ட பலதரப்பட்ட கொடுமைகளை எடுத்துரைக்கும் ஓவியப் படைப்புகள், மற்றும் எமது போராட்டம் சம்பந்தமான கண்காட்சி ஆவணங்கள் ஆகியன பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ந்ததை காணக் கூடியதாயிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிரதிநிதிகளுமே தமிழ் மக்களின் தார்மீக போராட்டதிற்கான தமது ஆதரவினை தெரிவித்ததோடு, தற்சமயம் நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
1.தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஆதரித்தல்
2.தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையரசு மேற்கொண்ட இனப் படுகொலையை பற்றி சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளல்
3.இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரை இடம் மாற்றுதல் அல்லது முற்றாக புறக்கணித்தல்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதிகள் அனைவருமே பிரித்தானியத் தமிழ் மக்கள் தங்களோடு இணைந்து பணியாற்றுவதால் பிரித்தானிய சமூகத்தினதும் தம் சார் தமிழ் சமூகத்தின் நலன்களை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி தமிழ் இனத்திற்கு நடந்த துயரங்களை இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்ககளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் ஏதுவாக இருக்கும் எனவும் அத்தோடு, தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களுக்கெதிராக ஆட்சி புரிந்த இனத்துவேச அரசை மாற்றியமைக்க தொழில் சங்கங்கள் ஆற்றிய பணிகளை வலியுறுத்திக் கூறினர்.
இத் தோழமை நாளை, ஒரு ஆரம்பப் புள்ளியாகவே தாம் கருதுவதாகவும், ஈழத் தமிழ் விடுதலைக்கான, தொழில் சங்கங்களின் பங்களிப்பு மென்மேலும் வளரும் என்று தாம் நம்புவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்,
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட குர்டிஷ் மற்றும் நேபாளிய சமூகத்தினைச் சேர்ந்த பிரதிநிதிகள் உரையாற்றுகையில், தங்கள் தங்கள் நாடுகளில் தமக்கு நேர்ந்த அடக்குமுறைகளையும் ஈழத்தில் தமிழருக்கெதிராக நடைபற்று வரும் இன்னல்களுக்குமான ஒற்றுமையையைப் பற்றியும், ஒடுக்கப்பட்ட அனைத்தின மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அவசியத்தையும், அவ்வாறன சமூகங்கள் ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்டவர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியத்தினையும் கோடிட்டுக் காட்டினர்.
கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழ் தோழமை இயக்கப் பேச்சாளர்கள், இந்த நிகழ்ச்சியை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு மென்மேலும் சமூகங்களுகிடையான ஆரோக்கியமான நிகழ்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று வேண்டிகொண்டனர்.
கலந்து கொண்டு பேசிய பிரதிநிதிகள்:
Raj Vakesan (பிரித்தானிய தமிழர் பேரவை)
Manny Thain (தமிழ் தோழமை இயக்கம்)
Sarah Sachs Eldridge (தமிழ் தோழமை இயக்கம்)
TU Senan (தமிழ் தோழமை இயக்கம்)
Hugo Pierre (Unison)
Chris Baugh (Public and Commercial Services Union)
Martin Powell Davies (தேசிய ஆசிரியர் சங்கம்)
John Reid (RMT போக்குவரத்துச் சங்கம்)
Paul Kershaw (Unite)
Representative from DAY-MER ( பிரித்தானியாவைச் சேர்ந்த துருக்கிய குர்டிஷ் சமுகம்)
Paul Callanan (Youth Fight for Jobs and Education Campaign)
Awatar Dhakal (நேபாளிய அரசியல் போராளி)
Claire Laker-Mansfield (Rape Is No Joke campaign)
Firasul Fouz (Stop Bodu Bala Sena)
Santhosh Rengan (திரைப்பட முதுகலை மாணவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்)
Niall Mulholland (Committee for a Workers' International)
மற்றும் மனித உரிமை அமைப்புகள்
Manny Thain (தமிழ் தோழமை இயக்கம்)
Sarah Sachs Eldridge (தமிழ் தோழமை இயக்கம்)
TU Senan (தமிழ் தோழமை இயக்கம்)
Hugo Pierre (Unison)
Chris Baugh (Public and Commercial Services Union)
Martin Powell Davies (தேசிய ஆசிரியர் சங்கம்)
John Reid (RMT போக்குவரத்துச் சங்கம்)
Paul Kershaw (Unite)
Representative from DAY-MER ( பிரித்தானியாவைச் சேர்ந்த துருக்கிய குர்டிஷ் சமுகம்)
Paul Callanan (Youth Fight for Jobs and Education Campaign)
Awatar Dhakal (நேபாளிய அரசியல் போராளி)
Claire Laker-Mansfield (Rape Is No Joke campaign)
Firasul Fouz (Stop Bodu Bala Sena)
Santhosh Rengan (திரைப்பட முதுகலை மாணவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்)
Niall Mulholland (Committee for a Workers' International)
மற்றும் மனித உரிமை அமைப்புகள்
Geen opmerkingen:
Een reactie posten