தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

பிரித்தானியக் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!


வர்த்தகர் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம்!
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 04:29.41 PM GMT ]
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பாக வாஸ் குணவர்தன கடமையாற்றி வருகின்றார்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த சியாம் என்ற வர்த்தகர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாஸ் குணவர்தனவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.
கடந்த 6ம் திகதியும் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 
பிரித்தானியக் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 12:50.34 PM GMT ]
பிரித்தானியப் பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய பொருளாதார வலய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமானால், பிரித்தானியப் பிரஜைகள் குறைந்த பட்ச வருமானத் தொகையொன்றைக் காட்டவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு ஓராண்டுக்கு முன்னர் வந்தது.
வாழ்க்கைத் துணை ஒருவரை பிரிட்டனுக்கு அழைத்து வந்து குடியிருக்க வேண்டுமானால் பிரஜை ஒருவர், ஆண்டுக்கு 18 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளை சம்பாதிப்பவராக இருக்கவேண்டும்.
அதேபோல பிள்ளை ஒன்றை அழைக்க வேண்டுமானால் அந்தத் தொகை 22,400 பவுண்டுகள் வரை உயர்கின்றது.
அதன் பின்னர் ஒவ்வொரு பிள்ளைக்கும் 2,400 பவுண்டுகள் வரை கூடுதலாக வருமானம் இருக்கவேண்டும்.
இவ்வாறான வருமானம் ரீதியான கட்டுப்பாடுகள் குடும்பங்களை துண்டாடுவதாக நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பிரிட்டனில் வரிசெலுத்தும் மக்களின் மீது சுமை சுமத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறான சட்டங்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten