தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

யாழ்.குருநகர் பாடுமீன் விளையாட்டு மைதானத்தை சுவீகரிப்பதற்கு இராணுவம் முயற்சி!- மக்கள் கொதிப்பு


துருக்கி தூதுவர்- அமைச்சர் பசீர் சந்திப்பில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு இணக்கம்
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 12:23.00 PM GMT ]
இலங்கை மக்களின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளுக்கும், உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சின் எதிர்க்ககாலத் திட்டங்களுக்கு துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, உதவிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கையிலுள்ள துருக்கித் தூதுவர் இஸ்கந்தர் கமால் ஒக்யாய் தெரிவித்தார்.
உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவுத்துடனான பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
துருக்கித் தூதுவரின் தலைமையிலான, துருக்கியின் பிரதமர் அலுவலகத்தின் ஒத்துழைப்புக்கும் இணைப்புக்குமான முகவரகத்தின் தலைவர் பேராசிரியர் மெஹ்மெட் யில்மாஸ் மற்றும் அதன் நிபுணர்கள் குழு அண்மையில் அமைச்சர் பசீர் சேகுதாவூதை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இச்சந்திப்பின் போது துருக்கித் தூதுவர் இலங்கையின் தற்போதைய அரசியல்,பொருளாதார சமூக, மதவிவகார சூழ்நிலைகள் குறித்தும் முஸ்லிம் அரசியல் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்துக்கொண்டார்.
இலங்கை –துருக்கி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம், இலங்கை-துருக்கி கலை,காலாசார ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஊடாக தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துருக்கி நிபுணர்கள் குழுவிடம் விபரித்தார்.
இதனை வரவேற்ற துருக்கித்தூதுவர், துருக்கி நாடாளுமன்றத்திலும் இதனையொத்த அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டதோடு இதனூடாக இருதரப்பு பரிமாற்றல்கள்,ஒத்துழைப்புகளைப் பலப்படுத்த தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் பசீர் சேகுதாவூத் தனது அமைச்சின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்த பரஸ்பர ஒத்துழைப்புக்கான வரைபையும், சமூக பொருளாதார ஒத்துழைப்புக்கான கருத்திட்ட வரைபொன்றையும் துருக்கித் தூதுவரிடம் கையளித்தார்.


யாழ்.குருநகர் பாடுமீன் விளையாட்டு மைதானத்தை சுவீகரிப்பதற்கு இராணுவம் முயற்சி!- மக்கள் கொதிப்பு
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 02:17.15 PM GMT ]
யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சென்.ஜேம்ஸ் பாடசாலைக்கு சொந்தமான பாடுமீன் விளையாட்டு மைதானத்தை இராணுவம் சுவீகரிப்பதற்கு முயற்சித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
குருநகர் பிரதேச பகுதியிலுள்ள இந்த மைதானத்தை இராணுவம் தனது தேவைக்காக பயன்படுத்துவதற்கும் அதில் பாரிய படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குருநகர் ஜக்கிய முன்னணி என்ற சமூக அமைப்பு இதனை வன்மையான கண்டித்துள்ளதுடன். யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்குத் தந்தையுடன் சென்று காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கள் சமூகத்திற்கு சொந்தமான ஒரே ஒரு விளையாட்டு மைதானத்தை இராணுவம் சுவீகரிப்பதற்கு விட முடியாது எனவும், மைதான சுவீகரிப்புக்கு எதிராக குருநகர் மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குருநகர் ஜக்கிய முன்னணி என்ற சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten