[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 04:04.11 PM GMT ]
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் பிரான்சில் வசிக்கும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் பிரான்சில் வசிக்கும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் படகு மூழ்கியதில் 9 அகதிகள் உயிரிழப்பு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 02:32.23 PM GMT ]
நீரில் மிதந்த 9 சடலங்களை சனிக்கிழமை பகல் வேளைகளில் அவதானித்த அதிகாரிகள் தேடுதலை ஆரம்பித்தனர்.
இந்த அகதிகள் படகின் வருகையினை எச். எம்.எ.ஸ் எனும் படகு உறுதி செய்துள்ளது.
நீரில் மூழ்கிய அப்படகானது கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவினை நோக்கி பயணித்தமையினை விமானப்படையினர் அவதானித்துள்ளனர்.
மூன்று விமானங்கள், எச். எம்.எ.ஸ் எனும் படகு மற்றும் இரண்டு வர்த்தக கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இத்தேடுதல் நடவடிக்கையானது இரவு வரை தொடருமென சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜெசன் கிளயார் அவர்கள் இவ்விபத்து தொடர்பாக கருத்து வெளியிடுவதற்காக கன்பராவிற்கு வருகை தந்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாம் படகு விபத்து இதுவாகும்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற படகு விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர்.
மேலும் கடந்த ஜூன் மாதம் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் 85 பேர் காணாமல் போயிருந்தனர்.
இதனைத்தவிர இயந்திரக் கோளாறு காரணமாக படகொன்று பாறையில் மோதியமையால் 50 புகலிட கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பான்மையானவர்கள் இந்தோனேசியா, ஆப்கனிஸ்தான் மற்றும் ஈரானியர்களாகவே இருந்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten