தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

இந்து ஆலயங்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்

வவுனியாவில் சுகாதாரத்துறை சிற்றூழியர் போராட்டம்: நியமனத்துக்கு அமைச்சர் உத்தரவாதம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 04:34.40 PM GMT ]
சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, தகுதியுள்ளவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்திருக்கிறார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய திணைக்களங்களில் சிற்றூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் நடைபெறவிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா நகரசபை மண்டபம் வரையில் பேரணியாகச் சென்றனர்.
அங்கு நுழைவாயிலில் வைத்து அவர்களை வழி மறித்த பொலிசார் அவர்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்.
அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, தகுதியுள்ளவர்கள் என்று நேர்முகப் பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அமைச்சரிடம் இந்தப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் உறுதியளித்து அதற்கு ஆதாரமாக வடமாகாண ஆளுனருக்குப் பெயர் விபரங்களுடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வழங்கியிருப்பதாக அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகிய நடேசன் பார்த்திபன் தெரிவித்தார்.

இந்து ஆலயங்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 05:01.56 PM GMT ]
கிழக்கு மாகாண இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இந்த சம்பவங்களுக்கு இராணுவத்தினரே பொறுப்பு எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குருக்கல் மடம் செல்லக்கதிர்காமம், குருக்கல்மடம் அய்னார் கோயில், மாங்காடு பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், இவை அடிப்படையற்றவை எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையார் கோயில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் மூலம் உண்மை வெளியிடப்படும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய ஊடகங்களின் போலிக் குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten