தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

வடமாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதம்



வடமாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 10:34.46 AM GMT ]
வடமாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரியர்களாக கடமையாற்றுவதற்கு 156 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்
ஜி.எ.சந்திரசிறி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்குரிய ஆசிரிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.
நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், தீவகம் ஆகிய பகுதிகளில் கடமையாற்றவுள்ளனர்.
இன்று நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்பர்.
பின்னர் இரண்டு வாரம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொண்ட பின் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை  மேற்கொள்ளவுள்ளனர்.
2ம் இணைப்பு
யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும்  சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்களை யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வழங்கி வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலமையில் இந்த நிகழ்வுகள் இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த முதலாம் திகதி யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் 321 பேர் உள்வாங்கப்பட்டனர். அவர்களுக்கு 6 நாள் பயிலுநர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
எனவே அவர்களுக்கான பயிற்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதனையடுத்து இவர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்கள் இன்று யாழ். மாவட்ட அரச அதிபரினால் பிரதேச செயலகர்களிடம் கையளிக்கப்பட்டன.
அவர்கள் ஊடாக குறித்த நியமனக் கடிதங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுள்ளது.
அதன்படி நெடுந்தீவில் 8 பேரும், ஊர்காவற்றுறையில் 20 பேரும், காரைநகரில் 11 பேரும், வேலையில் 23 பேரும், யாழ்ப்பாணத்தில் 21 பேரும், நல்லூரில் 29 பேரும், கோப்பாயில் 27 பேரும், உடுவிலில் 23 பேரும், தெல்லிப்பழையில் 31 பேரும், சங்கானையில் 19 பேரும், சண்டிலிப்பாயில் 24 பேரும், பருத்தித்துறையில் 15பேரும், கரவெட்டியில் 14பேரும், சாவகச்சேரியில் 39 பேரும், மருதங்கேணியில் 17 பேரும் பொறுப்பேற்றுள்ளனர்.
இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் இவர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பதில் அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten