donderdag 6 juni 2013

13ம் திருத்தத்தின் நாட்டுக்கு பாதகமான சரத்துகள் நீக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்!– விமல் -தெரிவுக்குழுவை மீண்டும் ஆரம்பிக்க அரசு மும்முரம்

புதுடெல்லியில் நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒத்தி வைப்பு
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:33.23 AM GMT ]
புதுடெல்லியில் நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டு தமிழ் கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தன.  தமிழக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மீளவும் வலு சேர்க்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படவிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, இம்மாத இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
புதுடெல்லியில் மத்திய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
13ம் திருத்தத்தின் நாட்டுக்கு பாதகமான சரத்துகள் நீக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்!– விமல் -தெரிவுக்குழுவை மீண்டும் ஆரம்பிக்க அரசு மும்முரம்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:25.28 AM GMT ]
13ம் திருத்தச் சட்டத்தின் நாட்டுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய சரத்துக்கள் நீக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தார் என வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நீதிமன்றின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றாலும் இல்லாவிட்டாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து அதன் மூலம் அரசியல் அமைப்பு திருத்தங்கள் பற்றி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக விமல் வீரவன்ச சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் பரவாயில்லை!- விமல்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பன நீக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்தாலும், பரவாயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிப் பெறும் என்ற நிலையில், அந்த தேர்தல்களுக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தார்.
எனினும், கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஆளும் தரப்பு கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போது, மாகாண சபைகளில் இருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்படதைத் தொடர்ந்து, தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வடமாகாண சபை நடத்தப்படுவதால், தற்போது நாட்டுக்கு ஆபத்து இல்லை என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முமமுரம்- 13 ஐ நீக்கவும் பிரேரணை கொண்டு வரத்தீர்மானம்?
நீண்டகாலமாக இழூபட்டுக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற தெரிக்குழூவை மீண்டும் ஆரமப்பிப்பதற்கு அரசாங்கத் தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதில் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சிகளுக்கு மீண்டும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக்க உள்ளதாகவும் அவர்கள் பங்கு பற்றாது போனாலும் தெரிவிக்குழவின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சில அமைச்சர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
13வது அரசமைப்பு திருத்தச் சட்டத்திருத்தம், மற்றும் இன்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பான சர்சைகள் எழுந்துள்ள நிலையிலேயே தெரிவுக் குழுவை மீண்டும் ஆரம்பிக்க அராசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை 13 வது அரசமைப்பு திருத்த் சட்டத்தை நீக்குவது தொடர்பான பிரேரணை ஒன்று அரசாங்க அமைச்சர்களால் கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten