donderdag 6 juni 2013

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றனர்!- சிங்களப் பத்திரிகை

லேக்கவுஸ் பகுதி கஸினோவுக்கு எதிராக பொதுபல சேனா ஏன் குரல்கொடுக்கவில்லை?!- அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:10.13 AM GMT ]
ஹலால் மற்றும் மாடு வெட்டுவதற்கு எதிராக சத்தமிடும் பொதுபல சேனா மற்றும் அமைப்புக்கள் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக ஏன் குரல்கொடுக்கவில்லை என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஹலால் மற்றும் மாடுவெட்டுவதற்கு எதிராக குரல்கொடுக்கும் பொதுபல சேனா, ராவணா பலய, விமல் மற்றும் சம்பிக்க ஆகியோர் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை?.
அந்த இடத்தை கஸினோவுக்காக பிரபல கஸினோக்காரர் பாக்கருக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அவர்கள் இதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க முன்வந்தால் நாங்களும் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றனர்!- சிங்களப் பத்திரிகை
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:23.47 AM GMT ]
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என ஈழத் தமிழர்களின் சர்வதேச காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரங்களே தற்போதைய தேவை என தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச காங்கிரஸ் தெரிவித்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten