vrijdag 19 december 2014

வெளிநாட்டில் உள்ளவர்களின் வாக்குகளைத் திருட முயற்சியா?

எஸ்.பி.யின் வாய் கழிவு நீர் கால்வாய்: ஆளும் கட்சி எம்.பி சுதர்ஷினி
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 12:15.19 PM GMT ]
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வாய் காரணமாக சிறைச்சாலைச் சோற்றை ருசி பார்த்தவர் எனவும் அவரது வாய் கழிவு நீர் கால்வாய் எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
வாய் காரணமாக சிறை தண்டனை அனுபவித்தும் அவர் திருந்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவை பெற்றி பெற செய்வதற்காக பெண்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பெண் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் தொடர்ந்தும் அமைச்சர் திஸாநாயக்க குறித்து கேள்விகளை எழுப்பிய போது,
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட ஏனைய பிரதிநிதிகள் சிரமங்களை எதிர்நோக்கினர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறித்து எஸ்.பி. திஸாநாயக்க கூறி கருத்துக்களை விமர்சித்து சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தனது கருத்தை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakp2.html

வெளிநாட்டில் உள்ளவர்களின் வாக்குகளைத் திருட முயற்சியா?
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 12:30.35 PM GMT ]
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருக்கும் ஆட்பதிவு திணைக்களம் கடந்த நவம்பர் 11ம் திகதி சகல பிரதேச செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
வெளிநாடுகளுக்கு சென்று 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் நோக்கில் செல்பவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை பிரதேச செயலாளர் அலுவலகம் அல்லது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1971 ஆட்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தின் இலக்கம் 10க்கு அமைய வெளியிடப்பட்டிருக்கும் இந்த சுற்றறிக்கையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
20 லட்சம் மேலதிக வாக்குகளினால் இம்முறை தேர்தலில் வெற்றி பெற போவதாக ஜனாதிபதி தெரிவித்து வரும் நிலையில், ஏதேனும் மோசடிகளுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி தேர்தலில் கள்ளவாக்குகள் போடப்படலாம் என்பதாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakp3.html

Geen opmerkingen:

Een reactie posten