[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:55.30 PM GMT ]
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் இலங்கையில் அரசியல் செய்ய அனுமதிக்க முடியாது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார மேடைகளில் குமார் குணரட்னத்தை உரையாற்றச் செய்ய முன்னணி சோசலிச கட்சி முயற்சித்தது.
குமார் குணரட்னம் ஓர் வெளிநாட்டுப் பிரஜை, அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒருவருக்கு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குமார் குணரட்னத்திற்கு வீசா வழங்கப்படாமை குறித்து முன்னணி சோசலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் சட்ட ரீதியாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள போதிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ மற்றும் கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் சமீர கொஸ்வத்த ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakr1.html
மைத்திரிபாலவின் கொள்கைப் பிரகடனம்! ஐ.தே.கவின் சிந்தனையே!– ஜோன் செனவிரட்ன
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:00.48 AM GMT ]
இந்தப் கொள்கைப் பிரகடனமே முழுக்க முழுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கொள்கைப் பிரகடனத்தின் அநேகமானவை நடைமுறையில் அமுல்படுத்தப்படக்கூடியவை அல்ல.
வெற்றிபெறப் போவதில்லை என புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் இவ்வாறு கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு மக்களிடம் பொய்யுரைக்க ஆரம்பித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakr2.html
ஜனாதிபதியின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் 22ம் திகதி வெளியிடப்படும்!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:13.25 AM GMT ]
மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப் பொருளில் இம்முறை கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
பௌத்த மாநாயக்க தேரர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை, 2010ம் ஆணடில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு இம்முறை 2015ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கைப் பிரடகனம் வெளியிடப்பட உள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று விகாரமகாதேவி பூங்காவில் வைத்து தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakr4.html
ஜனாதிபதியின் மட்டக்களப்பு கூட்டத்தில் சிங்கள மக்களே அதிகம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:18.00 AM GMT ]
நேற்று நடந்த கூட்டத்தில் ஒரு புறம் ஆர்ப்பாட்டமும் மறுபுறம் காலநிலை மாற்றமும் என பாரிய நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கூட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் வருகை தாமதமானதால் தூர பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.
ஏற்பாடு செய்திருந்த பஸ் வண்டிகள் தங்களது சேவை நிமிர்த்தம் சென்றதால் மக்கள் பெரும் அசோகரியத்துக்கு தள்ளப்படுள்ளனர்.
இதனால் பலர் கூட்டம் நடந்த இடத்தில் பல மணிநேரம் காத்திருந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakr5.html
மலையக மக்கள் முன்னணியின் தலைவி, மஹிந்தவுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்!- ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாக கட்சி அறிவிப்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 12:41.30 AM GMT ]
மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நேற்று இரவு தலவாக்கலையில் வைத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்தப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கட்சிக்குள் இதுவரை இருந்து வந்த பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்சி தலைவியின் மாற்று அறிவிப்பை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் கூடிய கட்சியின் செயற்குழு பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
ஏற்கனவே கடந்த வாரம் கூடிய கட்சியின் செயற்குழு பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்போது சாந்தினிதேவியும் சமுகமளித்திருந்தார்.
இதனையடுத்தே பிரதியமைச்சர் பதவியை வி ராதாகிருஸ்ணன் ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் சாந்தினிதேவியின் முடிவை ஆட்சேபித்துள்ள கட்சியின் செயற்குழு இன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி - சாந்தினி சந்திரசேகரன் பதவி விலக மறுப்பு!– மலையக மக்கள் முன்னணி கட்சிக்குள் பிளவு!
ம.ம.மு தலைவி மகிந்தவிற்கு ஆதரவு: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாக கட்சி அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தினி சந்திரசேகரன் அவர்கள் தெரிவிக்கின்றார்.
நேற்று மாலை தலவாக்கலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளர் வே.இராதாகிருஷ்ணன் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திருமதி. சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்த கருத்துக்கள்,
கேள்வி- ஊடகவியலாளர் சந்திப்பு வைப்பதற்கான காரணம் என்ன?
பதில்- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் தலைவியாகிய என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதற்காகவே இந்த ஊடாகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.
கேள்வி- மலையக மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவு யாருக்கு என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள்.ஆனால் மறுபடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கின்றீர்கள் இதற்கான காரணம் என்ன?
பதில்- எங்களது கட்சி ஆரம்பித்திலேயே எடுத்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தான். இதற்காக நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து எங்களுடைய கட்சியினூடான சில கோரிக்கைகளையும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அவருக்கு விளக்கமாக எடுத்து சொன்னோம்.
ஜனாதிபதியும் நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கும், மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அந்தவகையிலேயே என்னுடைய நிலைப்பாடு இறுதி வரைக்கும் அவருக்கு ஆதரவளிப்பது.
கேள்வி- கட்சியின் பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் தவறானதா? அவர்கள் உங்களிடம் அனுமதி பெறாமல் எடுத்த தீர்மானமா?
பதில்- சில காரணங்களுக்காக எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு கொள்கையாக கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் இவ்வாறான கட்சி தாவல்கள் தேர்தல் காலத்தில் இடம்பெறுகின்றமை குறித்து எனக்கு உடன்பாடுயில்லை. எனினும் கட்சியினுடைய உயர் மட்ட குழு ஒன்றினைந்து ஒரு முடிவு எடுத்தார்கள். ஆனாலும் அவ்வப்போது என்னுடைய கருத்துக்களையும் அவர்களிடம் தெரிவித்தேன். கூடுதலானர்கள் அதில் ஆர்வமுடையதன் காரணமாக அவர்களின் எடுத்த அந்த முடிவுக்கு தடைப்போட முடியாமல் இருந்தது. இருந்தாலும் என்னுடைய முடிவில் நான் உறுதியாகயிருக்கின்றேன்.
கேள்வி- மலையக மக்கள் முன்னணி கட்சியின் பலம் பொது செயலாளரிடம் இருக்கின்றதா ? அல்லது தலைவியாகிய உங்களிடம் இருக்கின்றதா?
பதில்- நிச்சியமாக என்னிடம் தான் பலம் இருக்கின்றது. பொது செயலாளர் என்ற வகையில் அவர் அவருடைய கடமைகளை மேற்கொள்கின்றார். எங்களுடைய யாப்பின் படி சில அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் கூட கட்சியின் முழு அதிகாரமும் தலைவியாகிய என்னிடமே இருக்கின்றது.
கேள்வி-நீங்கள் இரண்டு முடிவில் இருக்கின்றீர்கள், அதாவது அவர்கள் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், நீங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தெரிவிப்பதாகவும் இருக்கீன்றீர்கள் இதனால் கட்சியில் பிளவு ஏற்படுமா ?
பதில்- நிச்சியமாக இல்லை. அப்படியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதன் காரணமாக தான் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களிடம் கலந்துரையாடி நான் எனது நிலைப்பாட்டு குறித்து விளக்கமளித்தேன். அத்தோடு இந்த தேர்தலை வைத்து நாங்கள் எதனையும் தீர்மானிக்க முடியாது. இது நாட்டில் நடக்கின்ற ஒரு ஜனாதிபதி தேர்தல், இதில் எங்களின் கட்சியின் உடைய நிலைப்பாட்டை தான் அவதானிக்க வேண்டும். அந்தவகையில் என்னுடைய கட்சியின் எதிர்கால நன்மையை கருதி அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுத்த ஆதரவில் நான் உறுதியாகயிருக்கின்றேன்.
கேள்வி- உங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு எதுவும் கூற விரும்புகின்றீர்களா ?
பதில்- ஆமாம். ஆதரவாளர்கள் குழப்பமடைய தேவையில்லை. தலைவர் சந்திரசேகரனின் கொள்ளையை மதிக்கின்றவர்கள், அவரின் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். எந்தவிதமான பிரிவுக்கோ, பிளவுக்கோ எங்களுடைய கட்சியில் நீங்கள் இடமளிக்க கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்பதையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது, இவ்வாறான தீடிரென கூட்டம் ஒன்று கூட்டி கலந்துரையாடி , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது ஒரு நியாயமான செயல் அல்ல.
இவ்வாறு தீர்மானம் எடுப்பது பற்றி பொது செயலாளராகிய எனக்கு எதுவும் அறிவிக்கவில்லை. இது சட்டவிரோதமான ஒரு செயலாகும். ஆரம்பத்தில் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்போம் என தீர்மானம் எடுத்ததையடுத்து இப்படி தீடிரென மாறுவது குறித்து நான் கவலையடைகின்றேன்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவி எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த பின் இப்படி தாவியதற்கு நான் அதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பொது செயலாளர் ஏ. லோரண்ஸ் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakr6.html
Geen opmerkingen:
Een reactie posten