vrijdag 19 december 2014

ஏப்பிரலில் சகல கட்சிகளும் அமைச்சரவையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரி (வீடியோ, படங்கள் இணைப்பு)


ஏப்பிரல் 23 ம்திகதியோ அல்லது அதற்கு பின்னரோ நாடாளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதாக எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவின் திறந்வெளி அரங்கில் அவர் இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் 100 நாட்களுக்குள் தான் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள விடயங்களை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைபெறும் கட்சியிலிருந்தே பிரதமர் நியமிக்கப்படுவார், இரண்டாவது அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியை சேர்ந்தவர் பிரதிபிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்பிரலுக்கு பின்னர் உருவாகும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை சகலகட்சிகளையும் உள்ளடக்கியிருக்கும். தேசிய அரசாங்கத்தின் கீழ் முக்கியமான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக கொள்கை திட்டமொன்று உருவாக்கப்படும், தேர்தலில் வெற்றிபெற்றால் நான் 10 திகதி சத்தியப்பிரமாணம் செய்வேன், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
MS-Meeting 
MS-Meeting-01
 MS-Meeting-02
 MS-Meeting-03
 MS-Meeting-04
 MS-Meeting-05
 MS-Meeting-06
 MS-Meeting-07
 MS-Meeting-08
 MS-Meeting-09
 MS-Meeting-10
 MS-Meeting-11
 MS-Meeting-12
 MS-Meeting-13
 MS-Meeting-14
 MS-Meeting-15
 MS-Meeting-16
 MS-Meeting-17
 MS-Meeting-18
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418985725&archive=&start_from=&ucat=1&
19 Dec 2014

Geen opmerkingen:

Een reactie posten