ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது என்றும், எனவே இந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதுகுறித்து தெரிவிக்கையில் � ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது என்றும், எனவே இந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதுகுறித்து தெரிவிக்கையில் �
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர். தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர். மிகக் கொடூரமான ஆட்சியைத் தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருப்பவர். அவர் நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மைத்திரியை எடுத்துக்கொண்டால், அவருக்கு முன்பாக ரணில் என்னும் சமாதான முகமும், தமிழருக்கு சார்பானவர் என்ற முகமூடியும் போடப்படுகின்றது.
ஆனால் அவருடன் அருகில் இருப்பது ரணில் போன்று காட்டப்பட்டாலும் உண்மையில் அவருக்குப் பக்கபலமாக உள்ளவர்கள், இனவாதக கட்சிகளான ஹெலஉறுமய, ஜே.வி.பி. மற்றும் சந்திரிகா. இந்த சந்திரிகா ஆட்சியில் நடந்தது என்ன? சமாதான தேவதையாக தன்னைக்காட்டி வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கொடுப்பேன் என்று கூறி 62 வீதமான வாக்குகள் பெற்று ஆட்சிப்பீடமேறியவர். பின்னர் சமாதானத்திற்கான யுத்தம் நடத்தி 5 லட்சம் மக்களை குடாநாட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வைத்தவர்.
'சத்ஜெய' இராணுவ நடவடிக்கை, 'எடிபல' இராணுவ நடவடிக்கை, 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட தீவிரமான போர் நடவடிக்கைகளை நடத்தியவர். பல்லாயிரம் பேரை செம்மணியில் கொன்று புதைத்தவர். நவாலி தேவாலயம், மடு தேவாலயப் படுகொலைகள் உள்ளிட்ட தமிழர் தேசத்தில் பெருமளவு படுகொலைகளை அரங்கேற்றியவர்.
தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை கொலை செய்தவர். ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை முன்வைத்த போது ரணிலிடமிருந்த முக்கிய மூன்று அமைச்சுக்களைப் பறித்து சமாதான சூழலை குழப்பியவர்.
இந்த மைத்திரிபால அன்று வாகரையிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் லட்சம் லட்சமாக கொல்லப்பட்ட போது ராஜபக்ஷவுடன் கூடியிருந்து யுத்தத்தை நடத்தியவர். சர்வதேச ரீதியில் போரையும் ராஜபக்ஷவையும் நியாயப்படுத்தியவர். இன்று தெளிவாகக் கூறியிருக்கின்றார், ராஜபக்ஷவுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளியேன். சமஷ்டித்தீர்வு கொடேன் ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாப்பேன்.
பௌத்தத்திற்கு அரசியலமைப்பிலுள்ளவாறு முன்னுரிமை என்று இனவாதக் கட்சிகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளார். எனவே மைத்திரியின் ஆட்சியிலும் போரக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லையெனில், தமிழர்கள் விடயத்தில் சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி என்ற பேச்சுக்கும் இடமில்லை.
இந்நிலையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவருக்கேனும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்குவதானது எதிர்காலத்தில் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் இன அழிப்பை தமிழர்களே சரி என்று ஏற்றுக் கொள்வதாகவே அமையும்.
இந்தத் தேர்தல் வெறுமனே இலங்கையில் குடும்ப ஆட்சியையும், ஜனாதிபதி ஆட்சி முறையையும் ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் போன்ற ஒன்றைத் தோற்றப்பாடு மட்டுமே காட்டப்படுகின்றது. ஆனாலும் இந்தத் தேர்தலின் பின்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் தமது நலன்களைப் பேணக்கூடிய ஒருவரை ஆட்சிக் கொண்டுவந்து விட வேண்டும் என்பதிலும் போட்டியிட்டுக் கொண்டுள்ளனர் என்பதனையும் எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சீன சார்பு நாடுகள் ஓர் அணியாகவும், இந்திய மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஓரணியாகவும் திரண்டுள்ளன. அந்த சக்திகள் தமது நலன் பேணும் தலைமையை ஆட்சியிலமர்த்தும் போட்டியில் நாம் வெறும் கருவிகளாக மட்டும் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தராதது மட்டுமல்ல நிச்சயமாகத் தீமையை உண்டு பண்ணாது என்ற உத்தரவாதம் கூட இல்லா நிலையில் நடைபெறப் போகும் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களைக் கோருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டை அதாவது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுக் கோரிக்கை கைவிடவில்லை; கைவிடப் போவதுமில்லை என்ற செய்தியையும், அது அடையப்படும் வரை அமைதியாக இருக்கப் போவதில்லை அதற்காக அவர்கள் அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள் என்ற செய்தியையும் சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்த இதனை நல்லதொரு சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது இந்தத் தீவில் ஓர் ஆட்சியை உண்டு பண்ணுவதும் தமது நலன்களை அடைந்து கொள்வதும் சாத்தியமில்லை என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நாம் தெளிவாக உணர்த்த வேண்டும். இதனைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டார். |
19 Dec 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418985907&archive=&start_from=&ucat=1&
தனது மவுசு கூடுகிறதாம்! � ஹக்கீம் கூறுகிறார்.
|
முஸ்லிம் காங்கிரசின் மசுவு கூடிக் கொண்டேயிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரசின் மசுவு கூடிக் கொண்டேயிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். ஏனென்றால் எமது மவுசு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இவ்வாறு நீடிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இவ்வாறு வேறு காலம் வாய்க்காது. இரண்டு தரப்பினரும் எங்களது ஆதரவுக்காக ஏங்கி நிற்கிறார்கள். நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன்.
இந்தக் கட்சியை மிகக் கவனமாக இப்போதுள்ள கட்டத்திலிருந்து தாண்ட வைப்பது முக்கியமாகும். இந்த விடயத்தின் உண்மையான பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டினேன். ஏனென்றால், மக்கள் மிகவும் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள்.
எமது போராளிகள் மிகவும் ஆவேசத்தோடு இருக்கிறார்கள். இதுவொரு பலமான இயக்கம். வெறும் அரசியல் அதிகாரத்திற்கு பின்னால் அள்ளுண்டு போகும் இயக்கமல்ல. ‘பிச்சை வேண்டாம். நாயைப் பிடி’ என்று போனதால் தான் எங்களுக்குத் தலை குனிவு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரை எந்த அரசாங்கமாக இருந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுக்காமல் ஆதரவு அளிப்பது கட்சிக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கும் என்று நம்புகிறேன். அமைச்சுப் பதவிக்காக பல்லிளிப்பது மிகவும் கேவலமானது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். |
19 Dec 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418986069&archive=&start_from=&ucat=1&
வடக்கு- கிழக்கை இணைக்க மைத்திரி தயாரா பீரிஸ் கேள்வி
|
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை பெற்றுத்தரவும் இணங்கியுள்ளாரா? என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை பெற்றுத்தரவும் இணங்கியுள்ளாரா? என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழத்தைக் கைப்பற்றுவதற்கான கனவு இன்னமும் கைவிடப்படவில்லை. அதனை பெற்றுக்கொள்வதற்கான வடிவங்கள்தான் வேறுபட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டு மென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கான அழுத்தத்தை புலி டயஸ்போரா கூட்டமைப்பிற்கு வழங்கி வருவது, விடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுரேன் சுரேந்திரனே சர்வதேச தொலைக்காட்சியொன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இவர்களின் பலம் வேண்டுமென்பதற்காகவே எதிரணியினர் கூட்டமைப்பினர் தீட்டிய வெற்றுக் கடதாசியில் கையொப்பமிட் டுள்ளனர். ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக திரட்டிய சாட்சியங்கள் போதாமை காரணமாக சாட்சியம் பெறும் கால வரையறையை நீடித்துள்ளமை அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளின் விளைவுகளேயெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். |
19 Dec 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418986778&archive=&start_from=&ucat=1& |
|
|
Geen opmerkingen:
Een reactie posten