vrijdag 19 december 2014

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம்!- ராதிகா குமாரசுவாமி



வடமராட்சியில் எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் எலும்புக்கூடு மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 05:28.41 AM GMT ]
யாழ். வடமராட்சி பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சி முள்ளி பகுதியில் தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் புல் வெட்டிக் கொண்டிருந்த இராணுவத்தினர் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன.  நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx0.html
சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம்!- ராதிகா குமாரசுவாமி
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 05:34.20 AM GMT ]
சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்­கவும் தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளுக்கு இக்­கா­லக்­கட்டம் சிறந்த சந்­தர்ப்­ப­மாகும் என ஐ.நா.வின் குழந்­தைகள் மற்றும் ஆயு­த­ மோதல் தொடர்­பா­ன­ முன்னாள் விஷேட பிர­தி­நிதி ராதிகா குமா­ர­சு­வாமி தெரி­வித்தார்.
நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு சிறு­பான்­மை­யின கட்­சிகள் தமக்­குள்­ளான குரோத மனப்­பாங்­கினை மறந்து ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்
ஜனா­தி­ப­திக்­கான முன்­னு­ரி­மை­களும் சிவில் சமூ­கத்தின் முன்­னோக்கும் எனும் தொனிப்­பொ­ருளில் கொழும்பில் அமைந்­துள்ள இன ஆய்­வுக்­கான சர்­வ­தேச மையத்தில் நேற்று முன்­தினம் இடம்பெற்ற விஷேட கலந்­துரை­யாடல் ஒன்றில் கலந்­து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
இலங்­கையில் ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கட்­சித்­ தா­வல்­களால் அர­சி­யல்­வா­திகள் பேரம் பேசப்­படும் சக்­தி­க­ளாக மாறி­யுள்­ளனர்.
இலங்­கையை பொறுத்­த­வரை அர­சியல் மாற்றம் ஒன்று நில­வ­ வேண்டும் என்­பதே எனது கருத்­தாகும்.
யுத்தம் முடி­வடைந்­ததை தொடர்ந்து வடக்கில் வாழும் மக்கள் இன்­னும் சொல்லொண்ணா துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். அபி­வி­ருத்தி என்­ற ­போர்­வை­யி­ல் வ­டக்கு மக்­களின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வதை கண்­கூ­டாக காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இன்று அம் மக்­களின் காணி சுவீ­க­ரிப்பு பிரச்­சினை பூதா­க­ர­மாக வெடித்­துள்­ளது. அதற்­காக தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க அரசு சரி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை.
அதே போல் அண்­மை­ய ­கா­லங்­க­ளாக சிறு­பான்­மை­யின மக்கள் மீது கட்­ட­விழ்த்­து விடப்­பட்­டுள்ள திட்­ட­மிட்ட இன அடக்­குமு­றை­களை கட்­டுப்­ப­டுத்த இவ் அரசு முன்­வ­ராமை சிறு­பான்­மை­யினர் மத்­தியில் அர­சாங்­கத்தின் விரக்தி நிலையை மேலும் அதி­க­ரித்­துள்­ளது.
இவ்­வா­றான நிலையில் சிறு­பான்­மை­யி­னரை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சிகள் தூர ­நோக்கு சிந்­த­னை­யுடன் சரி­யான முடி­வினை எடுக்­க­ வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
இலங்­கையை பொறுத்த வரை இங்கு பெரும்­பான்­மை­யி­ன­ராக சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர். எனவே சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள பெரும்­பான்மை இன மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுடன் ஒன்­று­பட்டு செயற்­பட்டால் மாத்தி­ரமே அது யதார்த்­த­மா­ன­தாகும்.
எனவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்­நி­லையை உணர்ந்து அரச தரப்­புடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த முன்­வர வேண்டும்.
வடக்கில் நிலைகொண்­டுள்ள இரா­ணுவம் அங்­குள்ள மக்­களை இஸ்ரேல் பாலஸ்­தீ­னத்தை பார்ப்­பதை போல் பார்க்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அந்­நிலை மாற்­றப்­பட வேண்டும். அந்­நி­லையை மாற்ற அர­சியல் மாற்றம் ஒன்று அவ­சியம்.
இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் பல­ராலும் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­படும் ஒன்­றாக உள்­ளது.
எதி­ர­ணிகள் ஒன்­றி­ணைந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் மைத்­திரி­பா­ல­ சி­றி­சே­னவை பொது வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளமை அரச தரப்பு ஜனா­தி­பதி வேட்­பாளர் மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு பாரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
சிறு­பான்­மை­யி­னரின் மற்றும் நகர்­ப்புறங்களில் உள்­ள­வர்­களின் வாக்குகள் பொது வேட்­பா­ள­ருக்கு கிடைக்க கூடிய வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்ள நிலையில் அடுத்த ஜனா­தி­பதி யார் என்­பதை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கிரா­மப்­பு­றங்­களில் உள்­ள­வர்­களின் வாக்­கு­களே உள்ளன.
பொது வேட்பாளரின் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அகற்றும் வேலைத்திட்டத்தை நான் வரவேற்கின்றேன்.
அதேபோல் அவர் வெற்றியடையும் பட்சத்தில் இரண்டு வருடகாலத்துக்கு பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக தனது செயற்பாடுகளை முன்னெடுப்பாராயின் அது ஸ்திரமான அரசியலமைப்பினை மீள் உருவாக்குவதற்கு அவருக்கு பெரும் துணையாக இருக்கும் என நான் நம்புகின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx1.html

Geen opmerkingen:

Een reactie posten