தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆஸியில் தங்க அனுமதியில்லை!– ஸ்கொட் மொரிசன்

அத்துரலியே ரத்ன தேரரின் விகாரை மீது கல்வீச்சு தாக்குதல்-! பொரளையில் பதற்றம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 08:04.05 AM GMT ]
பொரளை கோதமி வீதியிலுள்ள, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் விகாரையின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடந்திருப்பதாகவும் அங்கு பொலிஸ் குழுவொன்று விரைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் விகாரை மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ´சதஹம் செவன´ சர்வதேச பெளத்த தகவல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ´வத்தஹேன விஜித தேரர்´ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தற்போது பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், ஆசிரமத்தில் தற்போது 10 தேரர்கள் வரை இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw1.html
ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆஸியில் தங்க அனுமதியில்லை!– ஸ்கொட் மொரிசன்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 08:51.48 AM GMT ]
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்குவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்நாட்டு குடிவரவு மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் குடியேற்ற ஆட்கடத்தல் வியாபாரிகள் தற்போது முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த தீர்மானத்து எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் இவ்வாறு இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw2.html

Geen opmerkingen:

Een reactie posten