[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 09:13.36 AM GMT ]
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அவசரமாக திறந்து வைக்கப்படவிருந்த சீடி ஸ்கேன் இயந்திரத்தை பொருத்திக் கொண்டிருந்த போது மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவியுள்ளது.
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான இந்த இயந்திரம் வடக்கு, வடமத்திய அவசரமான நேரத்தில் குருணாகல் வைத்தியசாலை உட்பட வைத்தியசாலைகள் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஸ்தாபிக்கப்படவிருந்தது.
6 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் 71 முதல் 78 வரையான 8 வைத்திய விடுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 50 விடுதிகளில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ காரணமாக நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டிடம் வெறுமையாக்கப்பட்டுள்ளது. தீ காரணமாக ஏற்பட்டுள்ள .இழப்பு 50 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw3.html
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் குழப்பம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 09:18.43 AM GMT ]
ஜனாதிபதி முன்வைத்த சில விடயங்கள் சம்பந்தமாக பெரும் அமளி ஏற்பட்டதாக பேசப்படுகிறது.
குருணாகல் மாவட்டம் பொல்கஹாவல தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்ற நிமல் ஜயசிங்கவுக்கு வழங்கியதை அடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த தொகுதியின் அமைப்பாளராக பணியாற்றி வரும் டிகிடி அதிகாரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
அதிகாரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால செயற்பட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw4.html
ஆளும்கட்சி பிரதேச சபை ஒன்றின் வரவு செலவுத் திட்டம் தோல்வி!
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 09:29.11 AM GMT ]
ஆளும் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். மேலும் இரண்டு பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5 பேரும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், குட்டி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தோல்வி தொடர்பான இந்த செய்தி வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw5.html
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர்?
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 09:46.42 AM GMT ]
எனினும் இது சம்பந்தமான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இது தற்போது கிடைக்கப்பெற்ற செய்தி. இது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw6.html
ஜனாதிபதி மஹிந்தவுக்கு மக்கள் ஆதரவு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 09:54.56 AM GMT ]
இதன் போது ஒரு தொகை பட்டாசு வெடித்து மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் நெடர்கோன் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw7.html
சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:01.13 AM GMT ]
சுவிஸர்லாந்து தூதுவருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
வடக்கில் மீள்குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல், பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYixy.html
Geen opmerkingen:
Een reactie posten