[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:11.43 AM GMT ]
தன்னுடைய ஆட்சியையும் தனது ஐக்கிய தேசியக் கட்சியையும் நிலைநிறுத்துவதற்காக ஜே.ஆர். ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் இப்போது அந்த ஆட்சிமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைகளில் அகப்பட்டுக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றக் கொண்டு வந்த அதிகார ஆட்சி முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றுகிறது எனச் சிந்திக்கும் போது, அவதந்திரம் தனக்கு அந்தரம் என்ற முதுமொழி ஞாபகத்திற்கு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டுமென்ற கருத்து பரவலாக உள்ள போதிலும் அட! ஒரு தடவையேனும் அந்த அதிகாரத்தில் இருக்காமல் அந்தப் பதவியை ஒழிப்பதா? என்ற ஏக்கம் முக்கிய அரசியல்வாதிகளிடம் இருக்கவே செய்கிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார்.
தன்னோடு இந்தப் பதவிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்த அவர் அப்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவைக் கோரியிருந்தார்.
எனினும் சந்திரிகாவிற்கு அடுத்தது தானே! ஜனாதிபதி என்று நம்பிய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க மறுத்துவிட்டார்.
என்ன செய்வது? விதிப்பயன் ரணிலுக்குப் பாதகமாக இருக்க, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார்.
அட! சந்திரிகா கேட்ட போது ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஆதரவு கொடுத்திருக்கலாம் என்று ரணில் வருத்தப்பட்டார். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதாக ரணிலின் ஞானம் இருந்தது.
இப்போது ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கக் கூடிய வல்லமை மகிந்த ராஜபக்வுக்கு மட்டுமே உண்டு.
அவர் நினைத்தால் பாராளுமன்றத்தில் தனக்கு இருக்கக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழித்துவிடலாம்.
அவ்வாறானதொரு நல்ல சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டதாயினும், மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் விடுத்த பரிந்துரை ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மீளவும் அடியுரமிட்டு பலப்படுத்தியுள்ளது.
ஆக, இனிமேல் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது என்ற பேச்சுக்கே இடமிருக்கமாட்டாது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் மட்டுமே இந்தநிலை என்று யாரும் நினைத்து விடலாகாது.
மாறாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுபவர் ஒரு பலமானவராக இருந்து அவர் வெற்றி பெற்றால் கூட அவரும் தனக்குக் கிடைத்த ஜனாதிபதிப் பதவியை இல்லாது செய்ய விருப்பம் கொள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டுமே தவிர அதனை ஒழிக்க எவராலும் முடியாது.
ஜனாதிபதி ஆட்சி முறை ஒழியவேண்டும் என்பது இறைசித்தமாயின் அப்போது இந்த நாட்டில் முக்கியமான மாற்றங்கள் நடந்திருக்கும்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv1.html
இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி: ஈழ அகதிகள் இருவர் கைது!
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:38.48 AM GMT ]
இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தால் 2 ஈழ அகதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர்களில் 23 பேர் நேற்று மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை இலங்கை தமிழர்கள் 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 26 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குளை விரைந்து விசாரித்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 15 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
4வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் 23 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். உடனே அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், 5வது நாளான நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஈழ நேரு, ஞானஉதயன், சந்திரகுமார், ஸ்ரீஜெகன், மகேஷ்வரன், சிவனேஷ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மருத்துவக் குழுவினர், அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்தவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த 7 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
இவர்கள் தவிர மற்ற 19 பேர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை பார்க்க வந்த நாம் தமிழர் கட்சியினருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் சிறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி கே.கே.நகர் போலீஸார் 11 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் பெரிதாவதாக உணர்ந்த போலீஸார், ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, கருணைராஜா உள்ளிட்ட இருவரை நேற்று மாலை கைது செய்தது,
சிறப்பு முகாமில் உள்ள அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி நீதித்துறை இரண்டு எண் நீதிமன்ற நீதிபதி ராஜாராம், நேற்று மருத்துவமனையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஈழ நேரு உள்ளிட்ட இருவரையும் டிசம்பர் 3ந்தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv3.html
Geen opmerkingen:
Een reactie posten