donderdag 20 november 2014

ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி அறிவித்தல் இன்று நண்பகல் வெளியாகும்! மைத்திரிபால தலைமையில் பிரசாரக்குழு

ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த!- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 12:37.01 AM GMT ]
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கான தீர்மானம் நேற்று இரவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போது கட்சியின் சிரேஸ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரோரித்தார்.
அதனை மற்றும் ஒரு சிரேஸ்ட தலைவரான டி எம் ஜெயரத்ன வழிமொழிந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYit6.html
ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி அறிவித்தல் இன்று நண்பகல் வெளியாகும்! மைத்திரிபால தலைமையில் பிரசாரக்குழு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 12:45.53 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏகமனதான ஒப்புதலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.
இதனையடுத்து, இன்று பகல் 12 மணியளவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்;;டம் இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து தொகுதி அமைப்பாளர்களின் நியமனங்கள் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி கட்சி மாறுவார் என்று கூறப்பட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYit7.html

Geen opmerkingen:

Een reactie posten