donderdag 20 november 2014

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்பட வேண்டும்!- வேலாயுதம் - தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை!– விஜித ஹேரத்!

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய கீதத்தை தாய்மொழியில் பாடுவதற்கு எமது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது.
அவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டில் சமூக ஒருமைப்பாடு காணப்படுவதாக எவ்வாறு கூற முடியும்.
தமிழ் மாணவர்கள் தாய்மொழியில் தேசிய கீதத்தை பாடியதனால், ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு பதிலளிக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான காரணிகளின் ஊடாகவே சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – விஜித ஹேரத்
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் விசாலமான ஓர் விடயமாகும்.
இதற்காக போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஒட்டு மொத்த வரவு செலவுத் திட்டத்தில் தசம விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் தமிழ் மொழி தெரிந்த எத்தனை பேர் இருக்கின்றார்கள்.
சில பிரதேசங்களில் தமிழ் மக்கள் தங்களது தாய் மொழியில் கடமைகளை செய்ய முடிவதில்லை.
குறைந்தபட்சம் தமிழ் மொழியில் விண்ணப்பம் ஒன்றையேனும் பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYit4.html

Geen opmerkingen:

Een reactie posten