zondag 23 november 2014

பாப்பரசரின் விஜயம் தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை: கத்தோலிக்க திருச்சபை!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிசின் நாட்டுக்கான விஜயத்தில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி முதல் 15 ஆம் வரை இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணம் திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளது.
நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் நாட்டில் அமைதியான சூழலை பேணுமாறு சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் திட்டமிட்டடி நடக்க இது முக்கியமானர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw2.html

Geen opmerkingen:

Een reactie posten