தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

கோவிலுக்கு காசு அனுப்பும் புலம்பெயர் தமிழர்கள் மகிந்தவின் பூசையும் அங்கே தான் ..

அதற்காக புலம் பெயர் தமிழரை நாட்டுப்பற்றை விடச்சொல்கிறீர்களா?!

நீங்கள் உங்கள் நாடு எது என்பீர்கள்??
லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம்(19) பிறந்த நாள். கொழும்பில் கூட அந்த அளவு ஆரவாரம் இருக்கவில்லை. ஆனால் பாருங்கோ யாழ் அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மட்டும் பெரிய பூஜை ஒன்று நடைபெற்றுள்ளது. மகிந்தர் நீடூழி வாழவேண்டும் என்று பூஜை நடக்க, பின்னர் கீதாஞ்சலி சந்தண மர கன்றுகளை ஐயருக்கு கொடுத்துள்ளார்.
வடமராட்சி சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் அகிலதாஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிளிநொச்சி அமைப்பாளர் மற்றும் மகிந்தரின் அந்தரங்க அயிட்டம் கீதாஞ்சலி இவர்கள் இணைந்து தான் இந்த பூசையை நடத்தியுள்ளார்கள். இது மட்டும் தான் வெளியில் வந்த செய்தி. வெளியில் வராமல் அனால் கசிந்த செய்தி என்னவென்றால், அந்த இடத்திலேயே நின்று தனது ஸ்மாட் போனை பாவித்து எடுத்த படங்களை கீதாஞ்சலி மகிந்தரின் காரியதரிசிக்கு அப்பவே அனுப்பிவிட்டாராம்.
யாழில் பெரிய பூஜைகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது. மக்கள் மகிந்த வாழ்க என்று கோஷமிட்டார்கள் என்று எல்லாம் இனி கதை அளப்பார் அவர். இதேநேரம் இந்த பூஜை நடத்திய அனைவரையும் பூசாரியும் கெளரவித்துள்ளார். இந்த அல்வாய் வேவிலந்தை "ஸ்ரீ முத்துமாரியம்மன்" அம்மன் கோவிலுக்கு, கனடாவில் இருந்து பலர் பணம் அனுப்பி வருகிறார்கள். இவர்களில் யாராவது ஒருவராவது இதுதொடர்பாக கேட்க்க மாட்டார்களா என்ன ? கோவில் நிர்வாகத்திற்கு இது தேவையான விடையம் தானா என்று தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1475.html

Geen opmerkingen:

Een reactie posten