[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:17.30 AM GMT ]
பிரதமர் பதவி குறித்த கனவுகள் எனக்குள் இல்லை என அமைச்சர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, நான் முன்பு என்ன நிலையில் இருந்தேன் என்பதும், இப்போது எந்த நிலையில் இருக்கிறேன் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். எனது தற்போதைய வளர்ச்சி குறித்த திருப்தி எனக்குள் இருக்கின்றது.
ஒருசிலர் எதிர்க்கட்சிகளின் பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடப்போவதாக கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரசாங்கத்தில் பிரதமர் பதவி எனக்கு கிடைக்கவிருப்பதாக தெரிவிக்கின்றனர். பிரதமர் பதவி குறித்த ஆசை எல்லாம் எனக்குள் இல்லை. தற்போதுள்ள அமைச்சுப் பொறுப்பில் நான் திருப்தியடைகின்றேன்.
அதேபோன்று ஆளுங்கட்சியை விட்டு எதிர்க்கட்சி வரிசைக்குச் செல்லவோ, எதிர்க்கட்சிகளின் பொது அபேட்சகராக போட்டியிடுவது குறித்தோ நான் கனவிலும் சிந்திக்கவில்லை.
எங்களுடைய பொது அபேட்சகர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். அவருடைய வெற்றிக்காக பாடுபடுவதே எங்கள் நோக்கம் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo6.html
ஆளுங்கட்சியின் சரிவு ஆரம்பம்: நந்தன குணதிலக பதவி விலகினார்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:46.45 AM GMT ]
2005ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட நந்தன குணதிலக, பின்னர் களுத்துறை மாவட்ட அமைப்பாளராகவும், பாணந்துறை நகராதிபதியாகவும் கடமையாற்றியிருந்தார்.
எனினும் ஆளுங்கட்சியின் அதிகார வெறி, ஊழல், மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக அவர் கடும் அதிருப்தியுடன் இருந்த நிலையில் அவர் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் நந்தன குணதிலக நகராதிபதி பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை உத்தியோகபூர்வமாக பாணந்துறை நகர சபை செயலாளரிடம் கையளிததுள்ளார்.
இதனையடுத்து தனது உத்தியோகபூர்வ வாகனத்தையும் கையளித்துள்ள அவர், பிட்டகோட்டையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்காக பொதுப் போக்குவரத்து பஸ்ஸொன்றில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜே.வி.பி. யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து கட்சி மாறியிருந்த போதிலும் நந்தன குணதிலக கடைசிவரை தூய்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
ஜனாதிபதியை தோற்கடிப்பதே எனது இலக்கு! நந்தன குணதிலக சூளுரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதே தனது இலக்கு என்பதாக பாணந்துறை முன்னாள் நகராதிபதி நந்தன குணதிலக சூளுரைத்துள்ளார்.
பாணந்துறை நகராதிபதி பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ள நந்தன குணதிலக, தற்போது பிட்டகோட்டை சோலிஸ் மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள நந்தன குணதிலக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு 2004ல் மீண்டும் சுதந்திரக் கட்சியினரை அதிகாரத்துக்கு வர வழியேற்படுத்திக் கொடுத்தது நாங்கள்தான்.
பின்னர் 2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.
இப்போது ஆளுங்கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகியுள்ளேன். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோற்கடிப்பதற்கு எனது முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
2005ம் ஆண்டு மஹிந்தவை வெல்ல வைப்பதற்கு எந்தளவுக்கு பாடுபட்டேனோ, 2014ம் ஆண்டில் அவரை தோற்கடிப்பதற்கு அதனிலும் மேலாக பாடுபடவுள்ளேன்.
தற்போதைய நிலையில் எந்தக் கட்சியிலும் இணைந்து கொள்ளும் நோக்கம் எனக்கு இல்லை. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவது எம்முன் உள்ள சவாலாக உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்தல், தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றை நாம் அடைந்து கொண்டால் இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும்.
அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் தரப்பினருடன் இணைந்து செயற்பட நான் காத்திருக்கின்றேன் என்றும் நந்தன குணதிலக தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlo7.html
வட மாகாண சபை முதல்வர் சிவில் வரம்புகளை மீறி செயற்படுகின்றார்: சம்பிக்க ரணவக்க
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:52.27 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று விக்னேஸ்வரன் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனி இராச்சியத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்திவிட்டார்.
மத வழமை சட்டம்,தேசவழமைச் சட்டங்களை நீக்கி முழு நாட்டிற்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதோடு மாகாண சபைக்கான அதிகாரங்களை நீக்க வேண்டும் பிரிவினையை தூண்டும் மாகாண சபை அதிகாரத்திற்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்க கூடாது.
இது சம்பந்தமான கோரிக்கைகளை நாம் அரசிடம் முன் வைத்துள்ளோம். மாகாண சபை அதிகாரத்தை முற்றாக நீக்காது வட மாகாண சபை தேர்தலை நடாத்திய அரசு மீண்டும் தவறை செய்து விட்டது.
அன்று பிரபாகன் அதிகாரம் இல்லாது வடக்கை ஆட்சி செய்தார் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிவில் அதிகாரத்தை மீறி மாகாண அதிகாரத்துடன் வடக்கை தனி இராச்சியமாக்க அடித்தளம் அமைக்கின்றார்.
ஒரு புறம் சிவில் மறுபுறம் மதம் சம்பந்தப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்துக்கின்றார். ஆகவே சகலருக்கும் ஒரே சட்டத்தை நாட்டில் அமுல்படுத்தவேண்டும் என கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlpy.html
Geen opmerkingen:
Een reactie posten