donderdag 20 november 2014

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு! நெடுந்தீவு மீனவர்களுக்கு தூக்கு: யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

ரத்ன தேரர் அஞ்ச வேண்டியதில்லை, பாதுகாப்பு வழங்கப்படும்: அமைச்சர் கெஹலிய
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:04.42 AM GMT ]
அதுரலியே ரத்ன தேரரின் விகாரைக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அங்கிருப்பவர்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியளித்துள்ளார்.
மேலும் குறித்த விகாரையின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் என்ற வகையில் தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதுரலியே ரத்ன தேரரின் விகாரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த விகாரையை சுற்றிலும் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYixz.html

சட்டவிரோதமாக தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு சிறைத் தண்டனை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:24.33 AM GMT ]
இலங்கையில் 24 வருடங்கள் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு குறைவாக வேலைகளுடன் கூடிய ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத சிறைத் தண்டனை முடிந்த பின்னர் பிரித்தானிய பிரஜையை மிரிஹானவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்படும் முகாமில் ஒப்படைக்குமாறு பண்டாரவளை நீதவான் ஜெயராம் ட்ரெட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ரிச்சர்ட் டேவிட் என்ற 65 வயதான பிரித்தானிய பிரஜைக்கே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 24 ஆண்டுகளாக வீசா அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix1.html

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு! நெடுந்தீவு மீனவர்களுக்கு தூக்கு: யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:22.30 AM GMT ]
போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெருந்தொகையான மீனவர்களும், அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையில் மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக யாழ். மீனவர் சங்க தலைவர் எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
குடாநாட்டு மீனவர்களையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவியுங்கள் எனக்கோரி அவர்களுடைய மனைவியர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து மேற்படி போராட்டத்தினை நடத்தியிருக்கின்றனர்.
இதன்போது தமிழக மீனவர்களுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு எதற்காக குடாநாட்டு மீனவர்களுக்கு வழங்க முடியாது? என உறவினர்கள் கேள்வி எழுப்பினர். 3வருடமாக கணவனை பிரிந்து வீதியில் அலைந்து திரிகிறோம்.
எங்களுக்கு எங்கள் கணவன்மாரை மீட்டுக் கொடுங்கள் என உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்ததுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்கள் கணவன்மாரை மீட்டுக் கொடுங்கள் என மனைவியர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix0.html

Geen opmerkingen:

Een reactie posten