donderdag 20 november 2014

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்!

மைத்திரிபால சிறிசேன வெளியேற மாட்டார்: அரசாங்கம் நம்பிக்கை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:29.56 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியில் இணைய மாட்டார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் அதிருப்தியில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுமந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு  கூட்டத்தில் அமைச்சர் சிறிசேன கலந்து கொண்டார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அவர் எந்த அறிகுறியையும் வெளியிடவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தெரிவுசெய்யும் யோசனைக்கு அவர் ஆதரவு வழங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மும்மொழிந்ததுடன் அமைச்சர்கள் ஏ.எச்.எம். பௌசி மற்றும் சீ.பி.ரத்நாயக்க ஆகியோர் வழிமொழிந்தனர்.
எவ்வாறாயினும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலக போவதாக பரப்பப்பட்டு வரும் கதைகள் அரசாங்கத்தை சீர்குலைக்க புனையப்பட்ட வதந்தியாக தெரிகிறது எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து விலகிய ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு கூட அரசாங்கத்தின் கூட்டணியில் இன்னும் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix2.html
தேர்தலை பதவிக்காலம் முடியும் வரை ஒத்திவைக்குமாறு கோரிய நாமல்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:59.13 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் போது வெறும் மூன்று பேர் மாத்திரமே பிரசன்னமாகி இருந்தனர்.
1.32 என்ற சுபநேரத்தில் ஜனாதிபதி அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அவரது பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகியோரே அங்கு இருந்தனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தனது பெயரை முன்மொழியுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஏ.எச்.எம். பௌசி, சீ.பி. ரத்நாயக்க ஆகியோர் வழிமொழிந்தனர். குறைந்தது மகிந்த ராஜபக்ஷவை வழிமொழிந்த அமைச்சர்கள் இருவர் கூட இன்று நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
அதேவேளை நேற்று இரவு நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில் இருந்து நாட்டிலும் கட்சியிலும் ஜனநாயக மறுசீரமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தனது கருத்தை ஏற்காது இன்று தேர்தல் அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்திட போவதாக அறிந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ, தனது செல்போனை அனைத்து விட்டு கொழும்புக்கு வெளியில் சென்று விட்டதமாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix3.html
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்! ஐ.தே.க.
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:10.28 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் பொதுவேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இதுதொடர்பான அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொது வேட்பாளர் தெரிவு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இதன் பின்னர் நாளை மாலைக்குள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நாளை மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix4.html
இலங்கையின் பொருளாதாரத்தை மஹிந்த சீர்குலைத்துவிட்டார்: சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:24.39 AM GMT ]
இலங்கையின் பொருளாதாரத்தை ஜனாதிபதி மஹிந்த சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்கள் இன்று கண்டியில் அஸ்கிரிய பீடம், மல்வத்து பீடங்களின் மகாநாயக்கா்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
இதன் போது நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரருக்கு விளக்கமளித்துள்ளனர்.
அங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மஹிந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீர்குலைத்து விட்டார்.
நிறைவேற்று அதிகாரம் இருக்கும் வரை ஜனாதிபதியால் எதனையும் செய்ய முடியும் என்ற நிலைதான் அதற்கான அடித்தளமாகும்.
சர்வதேச ரீதியாகவும் இன்று இலங்கைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
ராஜதந்திர ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஜாதிக ஹெல உறுமய குழுவினர் அஸ்கிரிய விகாரைக்குச் சென்று மகாநாயக்கா் உடுகம புத்தரக்கித தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஒரு தலைப்பட்சமான அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
ஜனாதிபதி பதவியின் ஒரு தலைப்பட்சமான அதிகாரங்களை நீக்கி விட்டு புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை இன்று முற்பகல் சம்பிக்க ரணவக்க உட்பட ஜாதிக ஹெல உறுமய பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இதன் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் அஸ்கிரிய மாநாயக்க தேரரையும் சந்தித்து இந்த பிரதிநிதிகள் ஆசி பெற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் பண பலம் காரணமாக குருடர்களாக இருப்பதாக மல்வத்து மாநாயக்கர் இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.
மாநாயக்க தேரர்களை சந்தித்த பின் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை தொடர்பான பிரசுரங்கள் கண்டி நகரில் விநியோகிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix5.html


அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:29.36 AM GMT ]
தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தினத்தை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள் இன்றைய தினம் ஒட்டப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.பல்கலைகழகத்திற்குள் ஒவ்வொரு வருடமும் நினைவு நாள் கடுமையான எதிர்ப்பினையும் மீறி அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் மாவீரர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வருடம் அவ்வாறான விடுமுறை அறிவிக்கப்படாது என துணைவேந்தர் அண்மையில் பத்திரிகையாளர்
சந்திப்பில் கூறியிருந்தார். எனினும் நேற்றய தினம் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை பல்கலைகழக வளாகத்திற்குள் பல இடங்களில் மாவீரர் தினத்தை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை காணமுடிந்தது.
மேலும் இச்சம்பத்தையடுத்து படையினர் அப்பகுதிக்குள் நுழைந்ததுடன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் நுழைந்த படைப்புலனாய்வாளர்கள் மேற்படி பிரசுரங்களில் பலவற்றை கிழித்து எறிந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYix6.html

Geen opmerkingen:

Een reactie posten