dinsdag 18 november 2014

பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு!

ஊவா மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 01:10.37 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt4.html
சந்திரிக்கா, ரணில் மட்டுமின்றி மஹிந்தவும் வாக்குறுதி அளித்தார்: ஹசன் அலி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 02:42.23 AM GMT ]
அம்பாறைக்கு தனி மாவட்டச் செயலகமொன்றை அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் உறுதிமொழி வழங்கியிருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமன்றி, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பொது வேட்பாளரா இல்லையா என்பது பற்றி எமக்குப் பிரச்சினை கிடையாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி போட்டியிடும் தேர்தல் கிடையாது. அம்பாறைக்கு நிர்வாக மாவட்டமொன்றை கோரியிருந்தோம்.
இவ்வாறு கோரியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, நாம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பிரதமர் டி.எம். ஜயரட்னவும் ஆதரவளித்திருந்தார்.
நாட்டை பிளவுபடுத்தி தருமாறு நாம் கோரவில்லை. ஓர் நிர்வாக மாவட்டமொன்றை வழங்குமாறே நாம் கோரினோம்.
இந்தக் கோரிக்கையை சில தரப்பினர் திரிபுபடுத்தி நாட்டை பிளவடையச் செய்வதாக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
தனி நிர்வாக மாவட்டம் குறித்த கோரிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உறுதியளித்திருந்தனர்.
2012 கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்த அரசாங்கம் நிர்வாக மாவட்டம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது என ஹசன் அலி சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையென்றால் அவர்களின் கோரிக்கைக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt6.html

பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 03:05.40 AM GMT ]
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 13ம் திகதி சிரேஸ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தீவகப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு பிரதிநிதியான விந்தனுடன் தீவக புலம் பெயர் வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் தீவக ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கும் இடையில் தீவக அபிவிருத்தி, குடிநீர், கல்வி விளையாட்டு, மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவது தொடர்பாகவும், தீவக பகுதிகளில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நெடுந்தீவைச் சேர்ந்த வர்த்தகரான செல்வரட்ணம் சுரேஸ் மேற்கொண்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt7.html

Geen opmerkingen:

Een reactie posten