தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

முல்லைத்தீவில் இராணுவக் கண்காட்சி! பொதுமக்கள் பங்கேற்பு

கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்! சஜித் பிரேமதாச
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:58.10 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்கால செய்தி விவரண நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒருவரும் இல்லாத பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.
நான் ஒருபோதும் பொறுப்புக்களை கண்டு பின்வாங்கியதில்லை.
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாயின் பலமான எதிர்க்கட்சி அவசியம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடந்த காலங்களில் இருந்த பிளவுகள் இப்போது இல்லை.
நாங்கள் விரைவில் ஆளுங்கட்சியாக மாற்றம் பெறுவோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq6.html
அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:51.35 PM GMT ]
சிறுபயிர் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் ஆளுங்கட்சி தொடர்பான தனது அதிருப்திகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் ரெஜினோல்ட் குரே, முன்னைய அரசாங்கங்களில் விவசாய அமைச்சரின் கீழ் காணி, நீர்ப்பாசனம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளும் இருந்தன.
தற்போது எனக்கு அதிலிருந்து சிறு பயிர் ஏற்றுமதி விடயம் மட்டும் அமைச்சுப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது வெறும் பெயரளவிலான அமைச்சுப் பதவி மட்டும்தான்.  இந்த அமைச்சுப் பதவிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
சிறுபயிர் ஏற்றுமதி அபிவிருத்தி என்றிருந்தாலும் ஒரு அங்குல நிலம் கூட எனது அமைச்சின் கீழ் இல்லை என்றும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே கடுமையான முறையில் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq5.html
ஐ.தே.க.வின் கம்பளை நகரபிதா ஆளுங்கட்சிக்குத் தாவினார்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:47.06 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பளை நகரசபையின் நகராதிபதியும், கம்பளை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான காமினி ஹெட்டியாரச்சி ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளார்.
கண்டியில் வைத்து (15ம்திகதி) ஜனாதிபதி முன்னிலையில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். இதன்போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடனிருந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு கம்பளை நகரத்தை தன்னால் ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது என்ற காரணத்துக்காகவே தான் கட்சி மாறியுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் கடந்த 25 வருடங்களாக முக்கியஸ்தராக செயற்பட்டுள்ள காமினி, கடந்த 12 வருடங்களாக கம்பளை நகர சபையின் தலைவராக தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq4.html
முல்லைத்தீவில் இராணுவக் கண்காட்சி! பொதுமக்கள் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:41.33 PM GMT ]
முல்லைத்தீவில் இராணுவத்தினரின் சாகசங்கள் அடங்கிய பிளாஷ் லைட் இரவு- பகல் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
இதில் இராணுவத்தினரின் சாகசங்கள், பெண் வீராங்கனைகளின் வாள் சண்டை உள்ளிட்ட சாகசங்கள், நாய்களின் சாகசங்கள், பாலம் நிர்மாணம், பரசூட் சாகசம் என்று பல்வேறு வகையான சாகசக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு மற்றும் சாகசங்கள், கமாண்டோ படையினரின் பணயக் கைதிகளை மீட்கும் போர்ப்பயிற்சி என்பனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நடைபெறும் இராணுவத்தின் முதலாவது சாகசக் கண்காட்சி இதுவாகும். இதனை முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தளபதி ஜகத் டயஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று முல்லைத்தீவின் முக்கிய படைப்பிரிவுகளின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq3.html

Geen opmerkingen:

Een reactie posten