[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:19.13 PM GMT ]
கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஹெல உறுமயவின் நிபந்தனைகள் தொடர்பில் எழுத்துமூல உத்தரவாதமொன்றை ஆளுங்கட்சி முன்வைத்திருந்தது.
இது தொடர்பாக தமது முடிவை அறிவிப்பதற்கு வரும் திங்கட்கிழமை (17) வரை ஹெல உறுமய கட்சி அவகாசம் கேட்டிருந்தது.
எனினும் சனிக்கிழமை நள்ளிரவு வரை கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஆளுங்கட்சியுடனான கூட்டணி உறவை உடனடியாக முறித்துக் கொள்ள ஹெல உறுமய கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பு பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குள் ரத்ன தேரர் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது முன்வரைவுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq1.html
தமிழீழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை ஐ.நா. சபை மேற்கொள்ளவேண்டும்- பினாங் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:25.45 PM GMT ]
இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணையை மேற்கொண்டு வரும் விசாரணைக்குழு, தமிழ் நிலத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநாடு கோரியுள்ளது.
மலேசிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பி ராமசாமியின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், தமிழக மீனவர்களை இந்தியா பாதுகாக்கவேண்டும்.
உலகில் வாழும் தமிழர்களுக்காக இந்தியா குரல்கொடுக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரலாற்றில் முதல் தடவையாக பினாங் மாநிலத்தில் சர்வதேச தமிழர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq2.html
Geen opmerkingen:
Een reactie posten