woensdag 19 november 2014

சர்வதேசத்தில் தேவையான நேரத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: பெலாரஸ்!

ஜனவரியில் தேர்தல் நடத்தும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: ஜோன் அமரதுங்க
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 12:32.43 PM GMT ]
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க, ஜனவரி மாதத்திற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு பிரதமர் டி.எம். ஜயரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் ஜனவரி மாதம் இலங்கை வரும் புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் ஆண்டகையின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.
ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற்றால், பாப்பரசர் வருகை தரும் போது அமைதியான சூழல் இருக்காது என்பதுடன் அது அவரது விஜயத்தை பாதிக்கும்.
ஜனவரி மாதத்திற்கு பின்னர் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், பாப்பரசரின் விஜயம் சம்பந்தமான நிகழ்ச்சி நிரலில் பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
இலங்கையில் மத சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் களுத்துறை மற்றும் சீதுவ பிரதேசங்களில் கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து சம்பவங்கள் நடைபெற்றது என்றார்.
இதற்கு பதிலளிக்க பிரதமர் டி.எம். ஜயரத்ன, குறித்த சம்பவங்கள் குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir2.html


பாதாள உலகக் குழு உறுப்பினர் எயார்போஸ் சம்பத் கைது- புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி கடத்தல் கும்பல்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 01:14.24 PM GMT ]
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் தெலவள பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் எயார்போஸ் சம்பத் என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் முன்னணி பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ரோஹன என்பவரின் சகா என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 20 தோட்டக்கள், இரண்டு கைக்குண்டுகள், ரவைக் கூடு, இராணுவ சின்னத்துடன் கூடிய மூன்று தொப்பிகள், 5 இராணுவ சீருடைகள் என்பது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த அங்குலான பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி மேற்படி நபர் பற்றி தகவல்கள் கிடைத்தன.
கல்கிஸ்சை பொலிஸார் இந்த கொலை சம்பவம் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி கடத்தல் கும்பல்
புஸ்ஸல்லாவ இரட்டைப் பாதை நகரத்தில் நேற்று மாலை சங்குவாரி தோட்டம் கீழ் பிரிவை சேர்ந்த ஏ.ஏ.ஜோதி என்ற நபர், தனது முச்சக்கரவண்டியை நிறுத்தி வைத்து விட்டு கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்ற வேளையில் அவரது முச்சக்கரவண்டி களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டதன் பின்னர் இன்று காலை கடத்தப்பட்ட முச்சக்கர வண்டி சங்குவாரி தோட்டத்தில் மீட்கப்பட்டது.
மீட்டகப்பட்ட முச்சக்கர வண்டியில் இரண்டு சில்லு உட்பட வாகன கெசட் களவாடப்பட்டுள்ளது.
அதேவேளை இதே புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் முறையாக தவணைக் கட்டணம் செலுத்தாத முச்சக்கர வண்டிகளை மையமாக வைத்து பினன்ஸ் நிறுவனம் போல் நடித்து, முச்சக்கர வண்டிகளை தூக்கிச் சென்று பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்த இருவர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றையவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தகடத்தல் தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெயரத் தலைமையில் குற்றப் புலனாய்வு அதிகாரி எம்.எம்.ஏச்.எஸ்.யாலேகம, பொலிஸ் காண்ஸ்டபல் (87752) ஆகியோர் கடத்தல்காரர்களை தேடும் பணிகளிளும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை இவ்வாறான கடத்தல்கார்களிடமிருந்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir4.html
பாடசாலை அதிபர் காணாமல் போயுள்ளார்!– இராஜகிரிய பிரதேசத்தில் சம்பவம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 01:29.18 PM GMT ]
கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் இயங்கும் பாடசாலை அதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலத்தின் அதிபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
என்.என். மித்ரபால என்ற இந்த பாடசாலை அதிபர் நேற்றிரவு தனது பாடசாலையில் பிரதி அதிபரது வீட்டுக்கு சென்று பாடசாலையின் சாவியை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன் பின்னர் அவர் பற்றிய எந்த தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என பாடசாலை அதிபரின் சகோதரரான பிரேமசிறி நாகசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir5.html
சர்வதேசத்தில் தேவையான நேரத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: பெலாரஸ்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 01:33.27 PM GMT ]
சர்வதேசத்தில் தேவையான எந்த நேரத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள பெலாரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளனர்.
சர்வதேச அமைப்புகளுடன் இருக்கும் நெருங்கிய தொடர்புகளை பாதுகாத்து கொள்வதற்காக இலங்கைக்கு தமது அரசங்கம் எதிர்பார்துள்ளதாக பெலாரஸ் நாடாளுமன்ற தலைவர் விளேடிமியர் எண்டிரேவென்கோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கும் பெலாரஸ் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு விடயங்கள் தொடர்பல் இந்த பேச்சுவார்த்தையின் போது பெலாரஸ் பிரதிநிதிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பெலாரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று பிரதமர் டி.எம். ஜயரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir6.html

Geen opmerkingen:

Een reactie posten