woensdag 19 november 2014

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடமாகாண சபையில் தீர்மானம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி வடமாகாண சபையில் இன்று யோசனை ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனையை சபை தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் சமர்ப்பித்தார்.
இந்தநிலையில் நிறைவேற்றப்பட்ட யோசனை, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையின்படி நூறுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் 8 முதல் 15வருடங்களாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பலருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை.
இந்தநிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என்று வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை கோருவதென்றும் யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYir7.html

Geen opmerkingen:

Een reactie posten