zondag 23 november 2014

கட்சியை விட்டுச் சென்றாலும் மைத்திரி மீது கோபமில்லை!: நிமல் சிறிபால டி சில்வா!

மைத்திரிக்கு ஏன் ஆதரவு வழங்கினேன்? சஜித் விளக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:51.06 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற ஆசையினால் விருப்பமின்றியேனும் பொது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அல்லது நான் போட்டியிட வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.
எனினும் கட்சியின் பொது தீர்மானத்திற்கு தலைவணங்கி அடுத்த ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை காண்பதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சஜித் கூறியுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டேன்- சஜித்
தமது தனிப்பட்ட முடிவுக்கு அப்பால் கட்சியின் செயற்குழு எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்ääஜே ஆர் ஜெயவர்த்தனவை ஜனாதிபதியாக்க தமது தந்தை ரணசிங்க பிரேமதாஸ முன்னின்று செயற்பட்டதை நினைவுப்படுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்தனர்.
எனினும் கட்சி தமது தனிப்பட்ட ஆயுதம் அல்ல என்ற அடிப்படையில் கட்சி எடு;த்த தீர்மானத்தின்படி பொதுவேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்கும் குறிக்கோளை முன்கொண்டு செயற்படப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx6.html
ஆளும் கட்சி 4 மாகாண சபைகளை இழக்கும் ஆபத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:09.32 PM GMT ]
அரசாங்கத்தில் இருந்து 28 பேர் வெளியேறலாம் என அரசாங்கம் கணக்கீட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் 28 பேர் அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்வதால் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையுமில்லை என பிரதமர் டி.எம். ஜயரத்ன கூறியுள்ளார்.
இதனிடையே நான்கு மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின் கைவிட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடமேல், மத்திய, ஊவா, வடமத்திய மாகாண சபைகள் ஆளும் கட்சியின் கையை விட்டுச் செல்லக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx7.html

48 மணி நேரத்தில் மஹிந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:38.16 PM GMT ]
அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவித்து 48 மணிநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து வழிப்பாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 48 மணிநேரத்தில் நாட்டிற்குள் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிரமமான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி நெருக்கடியை சந்தித்து வருவதால், எதிர்காலத்தில் எமக்கு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
இதனால், பழிவாங்கும் அரசியலில் இருந்து ஒதுங்கி பொறுமையாவும் சிந்தித்தும், கலவரமின்றியும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கின்றோம். மக்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாளைய தினம் தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மஹாபோதி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் மாநாயக்க தேரர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கரு ஜயசூரிய, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மைத்திரிபால சிறிசேன முக்கிய பௌத்த பிக்குவின் ஆதரவை பெற்றுக்கொண்டார்
இலங்கையின் எதிர்க்கட்சி ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று இலங்கையின் முக்கிய பௌத்த பிக்குவின் ஆதரவை பெற்றுக்கொண்டார்.
நாகவிஹாரையின் பிரதமக்குருவும் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்தவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் ஆசிர்வாத்தையே மைத்திரிபால சிறிசேன இன்று பெற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்தவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முன்வந்தமைக்காக மைத்திரிபால சிறிசேனவை தேரர் பாராட்டினார்.
மஹிந்த ராஜபக்ஷ 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதில் தோல்விக்கண்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வடமத்திய மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள பௌத்த முக்கிய தேரர்களை தாம் நாளை திங்கட்கிழமையன்று சந்தித்து ஆசிப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfoz.html
கட்சியை விட்டுச் சென்றாலும் மைத்திரி மீது கோபமில்லை!: நிமல் சிறிபால டி சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:06.06 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற மைத்திரிபால சிறிசேனவுடன் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த கோபதாபங்களும் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எவர் கட்சியை விட்டுச் சென்றாலும் தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சிகள் மேற்குலக தூதரங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo0.html

Geen opmerkingen:

Een reactie posten