donderdag 13 november 2014

தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி தீர்மானிக்கவில்லை: இலங்கை!

மஹிந்தவுக்காக கல்வி அதிகாரிகளிடமிருது நிதி திரட்டப்படுகிறது
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:39.26 AM GMT ]
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களிடம் நிதி திரட்டப்படுவதாக அவர்களில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி மடுகந்தைப் பகுதியில் உள்ள விகாரையில் விசேட பூஜை நடத்தி, வலயக்கல்வி அலுவலகத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே இவ்வாறு நிதி திரட்டப்படுகிறது.
அனைத்து உத்தியோகத்தர்களையும் விரும்பிய அளவு நிதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை கொஸ்லாந்தை பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு என நிதி சேகரித்து அனுப்புமாறு மாகாண கல்வித் திணைக்களத்தால் குறித்த வலயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்ட போதும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr6.html
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காவிட்டால் மகிந்தவின் தோல்வி உறுதி: அத்துரலியே ரத்ன தேரர்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:54.27 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாது போனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தீர்மானத்தை மாற்ற போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு வருவார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காது தேர்தலை நடத்தினால் அவரை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr7.html
தொண்டமானுடன் மல்லுக்கட்டும் திகாம்பரம்! அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:57.51 AM GMT ]
மஸ்கெலிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடயத்தில் அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக பிரதியமைச்சர் திகாம்பரம் மல்லுக்கட்டத் தயாராகியுள்ளார்.
மஸ்கெலிய பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக நிலையப் பொறுப்பதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் தப்பான முறையில் நடந்து கொண்டமைக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். எனினும் அமைச்சர் தொண்டமானின் சிபாரிசின் பேரில் தற்போது பதவியுயர்வு பெற்று மீண்டும் மலையகத்துக்கே வநதுள்ளார்.
இந்நிலையில் மஸ்கெலிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடயத்தில் பிரதியமைச்சர் திகாம்பரம் போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரியவை தந்திரமாக கைக்குள் போட்டுக் கொண்டே அமைச்சர் தொண்டமான் இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இந்த விடயத்தை தடுத்து நிறுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட வேண்டும் என்றும் பிரதியமைச்சர் திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அமைச்சர் தொண்டமானின் பேச்சுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்து அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் தான் தீர்க்கமான முடிவொன்றுக்குத் தள்ளப்பட நேரிடும் என்றும் அவர் அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னரும் அமைச்சர் தொண்டமானின் சிபாரிசின்பேரில் ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியொருவர் நியமிக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் திகாம்பரம் தலையீட்டினால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmsy.html
தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி தீர்மானிக்கவில்லை: இலங்கை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 06:27.48 AM GMT ]
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து மீனவர்களையும் மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராக இருப்பதாக, பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ள நிலையில் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்ததாக என இந்திய ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பிரபா கணேசன் மேன்முறையீடு செய்யாதிருந்தால் மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராகவிருப்பதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து இது குறித்த உத்தியோகபூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms0.html

Geen opmerkingen:

Een reactie posten