[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:45.30 AM GMT ]
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை மத்தள விமான நிலையத்தின் மொத்த வருமானம் 143.79 மில்லியனாகும்.
ஆனால் மொத்த செலவு 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விமான நிலையத்தின் மொத்த வருமானம் 48.1 மில்லியன் ரூபா. எனினும் இந்த காலப்பகுதியில் செலவு மாத்திரம் ஆயிரத்து 403.65 ரூபா. 2013 ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையத்திற்கு 760 விமானங்கள் வந்து சென்றன.
2014 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆயிரத்து 28 விமானங்கள் வந்து சென்றுள்ளன. இதனை தவிர மத்தள விமான நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு 565 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது 600 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu3.html
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்தும் பேசுவோம்: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:50.58 AM GMT ]
எனினும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நாடாளுமன்றத்தின் ஊடாக ஒழிப்பது தொடர்பில் ஏற்கனவே ஹெல உறுமய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது இது தொடர்பில் இதுவரை இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளன.
எனினும் தொடர் பேச்சுக்கள் இடம்பெறும் என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
இதேவேளை அத்துரலியே ரத்தன தேரர் கொண்டுள்ள நிலைப்பாட்டையே கட்சியும் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பஸ்ஸில் இருந்து இறங்க தயார்- ஆனால் பந்து வீசப்படும் விதத்திலேயே தீர்மான் அமையும்- உதய கம்மன்பில
2010 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பஸ்ஸில் பயணித்ததாகவும் தற்போது இந்த பஸ் சரியான வழியில் செல்லாமல் தவறான வழியில் செல்வதை காண முடிவதாகவும் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தவறான வழியில் செல்லும் பஸ்ஸை அதில் இருந்து கொண்டே சரியான வழியில் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றோம். ஆனால் தொடர்ந்தும் பஸ் தவறான பாதையில் சென்றால் பஸ்ஸில் இருந்து இறங்க தயார்.
நாங்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கத்திற்கு பந்தை வீசியுள்ளோம். அரசாங்கம் அந்த பந்தை எங்கள் பக்கம் வீசும் விதத்திலேயே தீர்மானங்கள் அமையும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
எனினும் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் கிடைக்கும் பதில் குறித்து தொடர்ந்தும் அவதானமாக பார்த்து கொண்டு இருப்பது ஜாதிக ஹெல உறுமயவின் நோக்கம் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu4.html
மினுவாங்கொடையில் எரிபொருள் நிலையம் கொள்ளை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:56.30 AM GMT ]
மினுவாங்கொடை, மெடேமுல்லை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளில் வருகை தந்த கொள்ளையர்கள் இருவரும் முகம் முழுவதையும் மறைக்கும் வகையில் ஹெல்மட் அணிந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிலையத்தில், இருந்த பணத்தைக் கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்த உரிமையாளரின் வாகன டயர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பணம் தொடர்பில் இதுவரை சரியான விபரம் வெளியிடப்படவில்லை.
எரிபொருள் நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளை பெற்றுள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu5.html
தம்புள்ளை முஸ்லிம்கள் அச்சத்தில்!– சட்டத்தரணி அமானுல்லா - தனிப்பட்ட பிரச்சினைகளை இனப் பிரச்சினையாக மாற்றாதீர்!- முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:23.09 AM GMT ]
தவிர, தம்புள்ளை முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்றதோர் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ளை, முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றுக்கு துணி வாங்க வந்த யுவதியொருவரிடம், நேற்றைய தினம் குறித்த நிறுவனத்துக்குள் வைத்து சிலர் தப்பாக நடக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தம்புள்ளை நகரின் கடைகள் அனைத்தும் மூன்று மணி நேரம் மூடப்பட்டிருந்தன.
இதனால், நகரும் வெறிச்சோடியிருந்தது. மட்டுமன்றி, இதற்கு ஆதரவான ஒரு குழுவினராலேயே காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இக்கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் நிறுவன உரிமையாளர் உட்பட்ட ஐவர் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேநேரம், தம்புள்ளை நகராதிபதி மற்றும் நகரசபை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஏற்பாட்டில் அங்கு இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றும் இடம்பெற்றது.
மேற்படி சம்பவம் நடைபெறும் தறுவாயில் பொதுபலசேனா அமைப்பினரும், ஞானசார தேரரும் தம்புள்ளையை அண்டிய பிரதேசமொன்றில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தனிப்பட்ட பிரச்சினைகளை இனப் பிரச்சினையாக மாற்றாதீர்!- பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
தம்புள்ளை முஸ்லிம் கடையொன்றில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினையை இன ரீதியிலான பிரச்சினையாக மாற்றி பூதாகாரமாக்காதீர்கள். இதன்மூலம் அளுத்கமை சம்பவம் போன்று பாரிய விளைவுகளை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்த மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதில் பொதுபலசேனா அமைப்பு மூக்கை நுளைத்ததை பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்றார்.
இதேவேளை தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு இனவாத சாயம் பூவதை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் இருக்குமாயில் எதிர் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) மாலை தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடையொன்றுக்கு பெருள் கொள்வனவிற்காக வந்த வெளி பிரதேசத்து சிங்கள பெண் ஒருவருடன் மோசமாக நடந்து கொண்டார் என கூறப்படும் சம்பவத்தையடுத்து அங்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலோயே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகும். அதனை இன ரீதியான பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இதனை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
குறித்த பிரச்சினையில் பொதுபலசேனா தலையிட்டமையானது சம்பவத்தை பெரிதுபடுத்துவதற்கேயாகும். இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணியும் கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. இது பெரும் பிரச்சினையாக மாற்றினால் அரசாங்கமே பெறுப்பேற்கவேண்டும்.
அளுத்கமவிலும் பதுளையிலும் மேலும் பல இடங்களிலும் வியாபார நிலையங்களில் இடம்பெற்ற சம்பவத்தைக் காட்டி முஸ்லிம்களின் மீது கறைபூசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான இனவாத சக்கதிகளை அரசு கட்டுப்படுத்தாதுள்ளது.
இதன் தொடராக தம்புள்ளையிலும் இனவாத சாயம் பூசப்பட்டு பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேச முஸ்லிம்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu6.html
சப்ரகமுவ பல்கலைகழக 10 மாணவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:34.27 AM GMT ]
பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய முகாமைத்துவ பீடம் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 06ம் திகதி முகாமைத்துவ பீட மாணவர்களால் முதலாம் வருட மாணவர்கள் மனிதாபிமான மற்ற முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரால் கவனிக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களும் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனால் இந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்த விரிவுரையாளர்கள் 2ம் வருட மாணவர்களுக்கான விரிவுரையை நேற்று பகிஷ்கரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளின் படி, குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பில் ஒழுக்காற்றுக் குழுவே தீர்மானிக்கும் எனவும் உபவேந்தர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmvz.html
ஆளும் கட்சியின் பதவிகளை ராஜினாமா செய்யும் நந்தன குணதிலக்க
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:37.47 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் பதவியில் இருந்தும் நகர முதல்வர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பதவிகளை இராஜினாமா செய்வது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு நாளை முற்பகல் நடத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த நந்தன குணதிலக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆரம்ப இணை தலைவராக இருந்துள்ளார்.
ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ஸவுடன் விலகி தேசிய சுதந்திர முன்னணியை ஆரம்பித்த நந்தன குணதிலக்க, பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் பாணந்துறை நகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகும் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmv0.html
தேசிய பொருளாதாரத்தை வீழ்த்த சதி! சவால்களை தனியாக எதிர்கொள்வேன்: ஜனாதிபதி மஹிந்த
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:43.12 AM GMT ]
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதை தற்போது சிலரால் சகித்து கொள்ள முடியவில்லை.
தேசிய பொருளாதார வீழ்த்தவே அவர்கள் முயற்சித்து வருகின்றனர். நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்ல இடமளிக்க முடியாது.
நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்வது பாரிய அநியாயம். பிறருக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து வேடிக்கை பார்க்க தயாரில்லை.
தனிப்பட்ட ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் சுமையை மக்கள் சுமத்தவில்லை. ஆட்சியாளர் என்ற வகையில் பிரச்சினைகளை நான் எதிர்கொள்வேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmv1.html
மருதானையில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் கிளப்! ஐவர் கைது
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 12:04.27 PM GMT ]
மருதானை, டார்லி வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் கிளப் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர் ஒருவர் இதனை நடத்தி வந்திருந்ததாக அறியக் கிடைத்துள்ளது.
மசாஜ் கிளப் என்ற பெயரில் சட்டவிரோத பாலியல் தொழில் நடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மசாஜ் கிளப்பை சுற்றி வளைத்த பொலிசார், விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmv3.html
கொஸ்லாந்த அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்களுக்கு கைகொடுக்கும் கண்காட்சி
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 01:35.37 PM GMT ]
இயற்கை அனர்த்த முகாமைத்துவத்தை மையமாகக் கொண்டு “மழை நீர் விழுந்து செல்லும் வழி மறைக்கப்பட்டவர்களின் விழி நீர் துடைப்போம்” என்னும் தொனிப்பொருளில் இக்காண்காட்சி இடம்பெற்றது.
விஞ்ஞான பாட ஆசிரியர் இ.நிருஜன் அவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இக்கண்காட்சியில் அப்பாடசாலைக்கு அண்மைய பாடசாலைகளான இ/சீ.சீ.தமிழ் மகாவித்தியாலயம், இ/கனகநாயகம் மகாவித்தியாலயம், இ/இந்து மகாவித்தியாலயம் மற்றும் இ/விக்கிலிய தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன் தமது பங்களிப்பையும் செய்திருந்தனர்.
இக்கண்காட்சியின் பிரதம விருந்தினராக கல்லூரியின் அதிபர் திரு.சம்மூன் அவர்கள் கலந்துகொண்டு நடாவை வெட்டி ஆரம்பித்து வைத்ததுடன் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிரபாத் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
இக்கண்காட்சி மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmv6.html
Geen opmerkingen:
Een reactie posten